பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

119


கைதைஅம் படு சினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் தேரே கண்ணில் காணவும் இயைந்தன்றுமன்னே நாணி நள்ளென் யாமத்தும் கண் படை பெறேனன்; புள் ஒலி மணி செத்து ஒர்ப்ப, விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.

- ஆசிரியர் ? நற் 178 "அசையும் மூங்கிலின் உள்ளேயுள்ள பொருள் மெல்லி தாகப் பிசைந்து வைத்தது போலத் தொகுதியாக அமைந்த இறகுகளையும் வளைந்த கால்களையுமுடைய ஆண் நாரை யால் நலன் உண்ணப்பட்டதும் துன்பமுற்றதுமான பெண் நாரை, கழிக்கரையிலே பெயருமிடங்களில் சிறிய மீன்களை யும் உண்ணாது, தாழையின் அழகிய கிளையில் வருத்தத் தோடு தங்கியிருக்கும். அவ்வாறாய தண்ணிய துறைவனின் தேரை இப்போது கண்ணிற் காணவும் இயைந்ததன்று இற் செறிப்பிற்கு நாணி இருள்செறிந்த நடு இரவில் கண்துயில் பெறேன். பறவைகளின் ஒலியை அவர் தேர்மணி ஒலி என்று கருதி, முன்பு அவரைத் தெளிந்த என் நெஞ்சம் இப்பொழுது அழிந்ததாயிற்று.” விரைந்து மணத்திற்கு ஏற்பாடு செய்யும் நோக்கத்தில் தோழி தலைவனுக்கு உரைத்தாள்.

212. நாரை மிதிதத நெய்தல் மலர் தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து. உமணர் மன்ற - கொண்க, - வயின்தோறு இன்னாது அலைக்கும் ஊதையொடு ஒரும் நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த வறு நீர் நெய்தல் போல, வாழாள் ஆதல் சூழாதோயே. - ஆசிரிய்ர் ? நற் 183 "நெய்தல் நிலத்தலைவனே, தம் நாட்டில் விளைந்த வெண்ணெல்லைக் கொண்டுவந்து தந்து பிற நாட்டில்