பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நாட்டம் கொண்டு திருமணத்தைத் தள்ளிப் போடும் தலைவன் உணரத் தோழி உரைத்தாள்

215. கண் கலங்காது பார்த்துக் கொள்! அருளாயாகலோ, கொடிதே - இருங் கழிக் குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தித் தில்லை.அம் பொதும்பில் பள்ளி கொள்ளும் மெல்லம் புலம்பl யான் கண்டிசினே - கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றெனப், பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் நீர் அலைத் தோற்றம் போல, ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.

ஆசிரியர் ? நற் 195 ‘கரிய கழியிலுள்ள நீர்நாய்க் குட்டி கொழுத்த மீன் களைத் தின்று தில்லைமரப் பொந்துகளில் படுத்திருக்கும் மெல்லிய கடற்கரைத் தலைவனே, கல் என ஒலிக்கும் பறவைக் கூட்டத்தையுடைய கடற்கரைச் சோலையாற் சூழ்ந்து தொண்டி என்னும் ஊர் அவ் ஊர் வயலிலே நெற்கதிர் அறுக்கும் உழவரின் கூர்மையான அரிவாளால் பல இதழ் களை உடையதும், விளங்கியதும், குவியாததுமான நெய்தல் மலர் அறுபடும் அறுபட்ட நெய்தல் மலர் நீரில் அலையும் தோற்றம் போல நீ நயந்த காதலியின் கண்கள் அலையும். அதனை யான் கண்டேன். அவள் அழாதிருக்க நீ அருளாதி ருப்பது கொடியது” என்று தலைவன் தலைவியை விரைந்து மண முடிக்க வேண்டி தோழி வற்புறுத்தினாள்.

216. திங்களே, நீ சிறுகிப் போவாய் பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடைப், பால் முகந்தன்ன பசு வெண் நிலவின், மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்! சால்பும் செம்மையும் உடையை ஆதலின், நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்