பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

123


நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்ச், சிறுகுபு சிறுகுபு செரீஇ அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?

- வெள்ளைக்குடி நாகனார் நற் 196 “பளிங்குகள் ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிக் கதிர்கள்; அவற்றின் இடையிடையே பாலை முகந்து வைத்தாற் போன்ற -பசுமையான வெள்ளைநிலா, முகிலின் பிடரியிற்தோன்றிப் பிறர் அறியாக் கலைகள் பலவும் நிறைந்த திங்களே, நீ அமைதியும் நேர்மையும் உடையாய் ஆதலின் உனக்கு ஒளிந்து வாழும் உலக உயிர்கள் இல்லை ஆனால் எனக்கு ஒளிந்து வாழும் ஒருவர் உண்டு. அவர்தாம் என் காதலர் அவர் இருக்குமிடத்தை எனக்குக் காட்டுக காட்ட மாட்டாய் நீ அறிந்ததைச் சான்று கூறாது பொய்த்தலின், நல்ல அழகை இழந்த என் தோள் போல மெலிந்து சிறிது சிறிதாகக் குறைந்து செல்வாயாக நீ தேய்ந்து செல்லுதலின் காதலரைக் காட்டுவது உனக்கு இயலுமோ? முடியாதே" என்றாள் தலைவி தனக்குள். s

217. இன்னும் உயிர் வாழ்கிறேனே! ஒங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, உளனே - வாழி, தோழி வளை நீர்க் கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, பைய இமைக்கும் துறைவன் மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!

- பேரி சாத்தனார் நற் 199 "வள்ைந்த கடல் நீரில் வலிய விரைவாகச் செல்லும் வளைந்த திமில் என்னும் படகில் பரதவர் மீன்பிடிக்கச் செல்வர் அவர் வளைந்த விசையான தூண்டிலை வீசி