பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


எறிந்து இழுக்கும் போது தூண்டிலின் இடையிடையே காற்று வீசும். அதனால் பரத்வர் திமிலில் கொண்டு சென்ற விளக்கின் ஒளிக்கற்றை பரவி அமர்ந்து அவியாது நீலநிற வானில் உள்ள மீன்கனோடு ஒப்பாகி மெல்ல மெல்ல மின்னும். அவ்வாறாய துறைவனின் உடம்பில் தோயும் முயக்கம் அடையாது யான் உள்ளேன். அப்போது, உயர்ந்த மணல் சூழ்ந்த நெடிய பெரிய பனை மரத்தின் பெரிய மடலில் கூடுகட்டி வாழும் வெண்மையான நாரை துணை யைப் பிரிவுற்றபோது இருள் செறிந்த இரவில் நரலும் அது கேட்டு யான் சேற்றுக்குழம்பு போல என் உள்ளத்தோடு மனமும் உருகி வருந்தும்; எனினும் யான் உயிரோடிருக்கி றேன்” என்று தலைவன் பிரிவால் வருந்திய தலைவியை ஆற்றுவித்தாள் தோழி.

218. ஒருநாள் பிரினும் உய்வு அரிது முழங்கு திரை கொழிஇய மூரி எக்கர், தடந் தாட் தழை முள்ளுடை நெடுந் தோட்டு அக மடல் பொதுளிய முகைமுதிர் வான் பூங் கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும், உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

- உலோச்சனார் நற் 203 "ஒலிக்கும் அலை கொழித்த பெருமை பொருந்திய மணல் மேட்டில் இருப்பது, தாழை வளைந்த அடியை யுடையது முள்ளையுடைய நெடிய தொகுதியான உள்மடலில் நெருங்கிய அரும்பு முதிர்ந்தது. வெள்ளையான பொலிவுள்ள சங்கை நீட்டி வைத்தது போலக் காட்சியளிப்பது வெள்ளை யான பூவையுடையது. மோதும் அலை உதைப்பதால் பொங்கித் தாதினை உதிர்ப்பது சிறுகுடிப் பாக்கத்துத் தெரு