பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

125


வின் புலால் மணத்தைப் போக்குவது. அவ்வாறாய மணம் கமழும் கடற்கரைச் சோலையில் இயைந்தது நம் நட்பு. ஒரு நாள் பிரியினும் நட்புப் பிழைத்தல் அரிது. இவ்வாறு கருதாமல் விரைவையுடைய குதிரைபூட்டிய நெடிய தேரின் வரவை ஆண்டுக் கெடும்படியாகச் செய்தது ஊர். இந்தத் தன் குற்றம் அன்றியும் இந்த ஆரவாரமுள்ள ஊர் வருத்த மும் பொருந்தியுள்ளது” என்று தலைமகன் கேட்பத் தோழி உரைத்தாள்.

219. வேறு மணமா? அழிவாள் தலைவி கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், இளையரும் முதியரும் கிளையுடன் குழிஇ, கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் திரை எழு பெளவம் முன்னிய கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. - ஆசிரியர் ? நற் 207 "அன்னாய், உப்பங்கழி சூழ்ந்த கொல்லை, கண்டல் மர வேலியுடையது. முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறு மனைகள் அங்கு உண்டு. அங்கே கொழுவிய மீன் கொள்பவர் பாக்கம் உண்டு. 'கல்’ என்னும் ஓசையுண்டாக நெடிய தேரை அழகுசெய்து இங்கே வருதல் காதலரைத் தவிர பிறர்க்கு அமையாதே. மலைபோல் திரண்டிருக்கும் மணலைக் கடந்து வந்தவர் தாமே வறிதே மீண்டு போவாரோ? நாள்தோறும் இளையரும் முதியரும் சுற்றத்தோடு கூடியிருந்து கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் அறுத்ததனாலே வலையையும் தூண்டிலையும் பற்றிச் சுருங்கிய மெல்லிய கொடிகளால் முடிகின்ற முதிர்ந்த பரத வரின் குரலை மொழி பேசும் இளைய மகள் இவள்