பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


காதலருக்கே உரியவள். வேற்று வரைவுபடுத்தினால், பெருங் காற்றால் அலையெழும் நடுக்கடலையடையும் கொலைத் தொழிலில் விருப்பங் கொள்ளும் பரதவர் சிறு பிள்ளை களிடத்தில் அகப்பட்டு அழிந்தவளே யாவாள்," என்று வேற்று மக்கள் மணமுடிவுக்கு வந்த போது தோழி தலைவி - தலைவன் களவியல் உரைத்தாள்.

220. துறைகெழு கொண்கன் துறந்தனன் யார்க்கு நொந்து உரைக்கோ யானே - ஊர் கடல் ஒதம் சென்ற உப்புடைச் செறுவில், கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறு கடற் தலைய தோடு பொதி தாழை வண்டு படு வான் போது வெரூஉம் துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

கோட்டியூர் நல்லந்தையார் நற் 211 “ஊரும் கடல்நீர் சென்ற உப்புடைய சேற்றைக் கொண்ட வளைந்த கழியிடத்து இரையை விரும்பி எழுந்த கரிய காலையுடைய குருகின் பாய்ந்து பிடித்தலுக்குத் தப்பிப் பிழைத்தோடியது வளைந்த முதுகும் தாடியுமுடைய ஆண் இறால் மீன். வீசும் அலை திரட்டிய மணல் மேட்டின் நெடிய கரையில் செறிந்த கடலின் புறத்திலே தலை சாய்ந்த இலைகள் பொதிந்த தாழையின் வண்டுகள் மொய்க்கும் பூவை நோக்கி இதுவும் ஒரு குருகு என இறால் மீன் அஞ்சும் அவ்வாறாய துறை பொருந்திய கடற்கரைத் தலைவன் என்னைத் துறந்தனன் என்று யாரிடத்தில் நொந்து உரைப்பேன்" என்று களவு நீட்டிக்கும் தலைவன் மணம் கொள்ளத் தோழி தான்ே கூறினாள்.

221. எம்மொடு இருந்தால் என்ன?

குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி, பகல் கெழு செல்வன் குடமலை மறைய,