பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ 饮29

என் இன்னுயிர் இறந்துபடுவதாயினும் சிறிதும் புலவேன். ஏனென்றால் சிறிய கால்களையுடைய நண்டோடு வந்து போகும் புலவு நாறும் அலைகளையுடைய குளிர்ந்த கடலில் பெரிய மீன்களைப் பிடிக்கும் சிறுகுடிப் பரதவர் படகு களுக்குத் தெரியும்படி இரவில் கொளுத்திய நெருங்கிய கதிர்களைக் கொண்ட ஒள்ளிய விளக்கு முதிராத இள ஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும். கழிக்கரைச் சோலையோடு பெரிய கடல் துறையுமுடைய சேர்ப்பன் முன்பு தான்ே வந்து என்னை மகிழ்வித்தான்். இனியும் வருவான் என்பதால் யான் புலவேன்” என்று பொருள் தேடப் பிரிந்த தலைவன் பிரிவை ஆற்றாது தலைவி தோழிக்குச் சொன்னாள்.

224. விரைந்து மணத்தலே பழிப்பினை விரட்டும்

இவள்தன் காமம் பெருமையின், காலை என்னாள் நின் அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி, பகலும் வருதி, பல் பூங் கானல், ; இன்னீர் ஆகலோ இனிதால் எனின், இவள் அலரின் அருங் கடிப் படுகுவள் அதனால் எல்லி வம்மோ, - மெல்லம் புலம்பு, சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் துறையினும் துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.

- உலோச்சனார் நற் 223 "நெய்தல் நிலத் தலைவனே, இவள் தன் காமம் மிகுதியாலே இது காலை நேரம் எனக் கருதமாட்டாள் உன்னிடம் மிகவும் அன்பு கொண்டிருத்தலால் இவளை நீ அளித்தல் வேண்டும். அதன நீ பல பூக்களையுடைய சோலையில் பகலிலும் வருவாயாக. இவ்வாறு நீ வருதல் இனிதாகுமா என்றால் இல்லை. இவள் பழியினால் அரிய காவலில் வைக்கப்படுவாள். அதனால் நீ இனி இரவில் வருக அவ்வாறு வரின் இந்த அம்பல் நிறைந்த ஊரில் சுறா மீனினம் மிக்க நிறைந்த கடற் பரப்பிலுள்ள துறையிடத்தி