பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


லும் துஞ்சாத கண்ணுடைய பெண்டிரும் உண்டு. ஆதலின் இவளை நீ வரைந்து கொள்ளுக’ என்று தோழி கூறினாள்.

225. நீ செய்த அருள் அலராயிற்று!

அறிந்தோர் 'அறன் இலர் என்றலின், சிறந்த இன் உயிர் கழியினும் நனி இன்னாதே; புன்னை அம் கானல் புணர் குறி வாய்ந்த பின் ஈர் ஒதி என் தோழிக்கு, அன்னோ படு மணி யானைப் பசும்பூட் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஒவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன, கெளவை ஆகின்றது - ஐய! - நின் அருளே.

- தேவனார் நற். 227 “ஐய, அறிந்தோர் என்பவரெல்லாரும் "அறநெறியிலே ஒழுகுபரல்லர்” என்பதால் சிறந்த இவளது இனிய உயிர் கழி யினும் மிகவும் துன்பமுடையதே யாகும். புன்னை மரச் சோலையில் கூடுதற்குக் குறித்த இடம் வாய்க்கும்படி செய்த, பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு ஐயோ, நீ செய்த அருள்தான்் பெரிய அலராய் ஆயிற்று. அல்லவா? தொங்கும் மணிகளையுடைய யானைகளையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரின் கொடியசை யும் தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் ஊரில் கள்ளை யுட்ைய பானையில் வண்டுகள் ஒலித்து நீங்காத தேர்கள் வழங்கும் தெருவில் ஏற்படும் ஆரவாரம் போன்றதாய் இருந்தது எனவே விரைவில் வரைக” என களவொழுக்கம் நீட்டித்த தலைவனிடம், தோழி கூறினாள்.

226. நெஞ்சம் நீங்காத காதல் மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கைதொழும் மரபின் எழு மீன் போல, பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோயச், சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் துறை புலம்பு உடைத்தே - தோழி, - பண்டும்,