பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

133


முயங்குக" எனக் கூறி அழுதது இவ்வூர். யாம் மற்றொன்று செயின் இவ்வூர் என்ன பாடுபடுமோ?” என்று தலைவன் வந்து மறைந்திருப்பது கண்டு குறிப்பாகக் கூறினாள் தோழி.

229. சிரிப்பு வருகிறதில்லையா? நகையாகின்றே - தோழி, -'தகைய அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை மணிமருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, துணி நீர்ப் பெளவம் துணையோடு ஆடி, ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், தெளி தீம் கிளவி, யாரையோ, என் அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ? என, பூண் மலி நெடுந் தேர்ப் புரவிதாங்கி, தான்் நம் அணங்குதல் அறியான், நம்மின் தான்் அணங்குற்றமை கூறிக் கானல் சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே.

அல்லங்கீரனார் நற் 245 "தோழி, தகுந்த அழகிய மலரையுடைய கழிமுள்ளியாற் செய்தது ஆய்ந்த பூங்கோதை அதை நீலமணி போன்ற கூந்தலில் வண்டுகள் இசைக்கும்படி சூடியிருக்கிறாய். தெளிந்த நீர்க் கடலிலே தோழிமாரோடு நீராடியிருக்கிறாய் நேரான நுண்ணிய இடையையும், அகன்ற அல்குலையும், தெளிந்த இனிய மொழியையும் உடைய பெண்ணே! “என்னை அரி தாகக் கூடியிருக்கும் இனிய உயிரைக் கவர்ந்த நீ யார்?" என்று பூண்கள் நிறைந்த நெடிய தேரில் குதிரை பூட்டி வந்த தலைவன் வினாவினான் அவன் நம்மை வருத்தம் செய்ததை அறியான். நம்மால் அவன் வருத்தம் அடைந்ததைக் கூறினான். கானல் வண்டுகள் ஒசையிடும் ஒளிமிக்க நம் நெற்றியைக் கண்டு பெருங்கடற் சேர்ப்பன் தொழுது நின்றான் அது நகையாய் இருக்கிறது." என்றாள் தோழி

230. வருவாரோ யாதோ? இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,