பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

135


அயினி மா இன்று அருந்த, நீலக் கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் துணை இலை தமியை சேக்குவை அல்லை - நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி வானம் வேண்டா உழவின் எம் கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே.

- உலோச்சனார் நற் 254 “வண்டற்பாவை செய்து கொடுத்தும், வரும் அலைகளை எற்றியும், குன்றுபோல் ஓங்கியிருக்கும் வெள்ளை நிறமான மணலில் கொடியாகப் படர்ந்திருக்கும் அடும்பு மலரைக் கொய்தும், வெறுப்பில்லாத நல்ல மொழிகளில் இனிய வற்றைக் கூறியும், சொல் எதிர் பெறாமல் வருந்தி மெல்லத் திரும்பிப் போவதென்று செல்லும் ஒலியுள்ள பெரிய கடற் பரப்பையுடைய தலைவனே, நேர்மையான இடத்திலே இருக்கும் உப்புப் பாத்திகளிலே கடல்நீரைப் பாய்ச்சி மாற்றி உப்பு விளைத்துக் கொள்வதன்றி, மழை வேண்டாத இவ் உழவுத் தொழில் செய்யும் எம் கானலிலுள்ள சிறு குடியில் வந்து தங்கிச் செல்வாயாக செல்லின், உப்பு வணிகர் எம்மிடம் வாங்கிக் கொண்ட உப்புக்கு விலையாகத் தந்த நெல்லால் ஆக்கிய உணவு உன் குதிரை இன்று தின்னும் நீயும் நீலமலர்த் தொகுதி கமழும் பெருமாலை புரளும் உன் மார்போடு துணையில்லாமல் தனியாகப் படுத்து உறங்குவாயுமில்லை” என்று தலைவனிடம் தோழி உரைத்தாள்.

232 இல்லில் அடைத்தாள் அன்னை பல் பூங் கானல் பகற்குறி மரீஇச் ; செல்வல் - கொண்க, - செறித்தனள் யாயே - கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் திருவுடை வியன் நகர் வரு விருந்து அயர்மர், பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்