பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கிளைகளையுடைய கூட்டம் மணம் கமழும் ஞாழலின் உதிர்ந்த மலரைக் காலால் துழாவி விரித்துக் கோலம் செய்யும். அவ்வாறாய துறையையுடைய தலைவனோடு கூட்டிய இனிய விருப்பத்தையுடைய கானலில் தலைவி யின்றித் தனியாக யான் வருதல் மிகவும் வருத்தமுடையதாக இருக்கிறது” எனக்கருதி வாராமலிருந்த யான் முன்பு ஒரு நாள் வந்தனன். சிறிய நாவுடைய ஒள்ளிய மணியின் தெளிந்த ஒசையைப்போலக் கூட்டமான மீனைத் தின்ன வந்து கூடும் பறவை ஒலிக்கும் குரலைக் கேட்டு இவ்வொலி தலைவன் தேரின் மணியொலி எனக் கருதி, "இதோ தலைவன்’ என்று சொல்லுமுன் வலிய குதிரையைக் கொண்ட தோன்றல் வந்து

235. உன் செயல் கொடிது

தடந் தாட் தாழைக் குடம்பை, நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, உருள் பொறி போல எம் முனை வருதல், அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் பெருந் தோட் செல்வத்து இவளினும் - எல்லா - எற் பெரிது அளித்தனை, நீயே பொற்புடை விரி உளைப் பொலிந்த பளியுடைய நன் மான் வேந்தர் ஒட்டிய ஏந்து வேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே: மறப்பல் மாதோ, நின் விறற் தகைமையே. - பரணர் நற் 270 “எல்லா! அகன்ற தளையுடைய தாழையின் பகுதிகளாலே உண்டாக்கப்பட்ட எம் குடிலிலிருந்து பெறாதபடி, சோலை யில் கமழும் மலர்களைச் சூடியதால் வண்டுகள் வீழும் நறுமணமுள்ள இருள் போன்ற கூந்தலில் மிக்க துகளில் ஆடி உருளும் இயந்திரம் போல எம்முன் வருதலாகிய அழகுத் தகுதி தவிர உன்னை வயப்படுத்திக் கொள்ளத் தெரியாத பெரிய தோள்களையுடைய செல்வ மகளாகிய இவளைக் காட்டிலும் நீ என்மேல் பெரிதும் அருள் காட்டி னாய். எனினும், அழகிய விரிந்த பிடரி மயிர் பொலிவு