பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ ፲39

பெற்றதும் விரைந்த நடையையுடையதுமான நல்ல குதிரைப் படையையுடைய பிண்டன் முதலான பகைவரைப் போரிலே தோற்று ஓடச் செய்து, அவரின் மகளிர் கூந்தலால் செய்யப் பட்ட கயிற்றால் அவரின் களிற்றைப் பிணிக்கும் ஏந்திய வேலையுடைய நன்னன் செய்கையினும் உன் செய்கை கொடி யதே. ஆதலால், உன் வலிய தகுதிப்பாட்டை மறந்து விடு கிறேன்” என்று தலைவனிடம் தோழி வாயில் எதிர் கொண்டு கூறினாள்.

236. நோயினும் பெரிது அம்பல்! கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், படிவ மகளிர் கொடி கொய்து அழித்தப் பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒருசிறை, கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் பூவுடைக் குட்டம் துழவும் துறைவன் நல்காமையின், நசை பழுதாகப், பெருங் கையற்ற என் சிறுமை, பலர்வாய் அம்பல் மூதூர் அலர்ந்து, நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.

- முக்கால் ஆசான் நல்வெள்ளையார் நற். 272 "கடற் காக்கையின் சிவந்த வாயையுடைய சேவல், நோன்பு கொண்ட மகளிர் தங்கியிருப்பதற்காகக் கொடிகளைக் கொண்டு அழித்த அழகிய அடும்பின் கொடியைக் கொண்ட வெண்மணற் பரப்பின் ஒரு பக்கத்தில், முதற் கருப்பதோடு தங்கியிருந்த அழகிய பேடைக்கு இரை கொடுக்க விரும்பியது. கரிய சேற்றிலிருக்கும் அயிரை மீனைத் தேர்ந்தெடுக்க வேண்டித் தெளிந்த கழியிடத்துப் பூவுள்ள மடுவில் துழாவி யது. அவ்வாறாய நெய்தல் துறையையுடைய தலைவன் தலையளி செய்யாமையால் என் விருப்பம் வீணாகி விடவே அதனால் பெரிதும் செயலற்ற என் சிறுமை பலர் வாயிலும் அம்பலாகி மூதூரில் அலர்ந்து நோய் ஆயது, அது இப் போது பல நோயினும் பெரிதாயது” என்று மணநாளைத் தள்ளிப் போடும் ஆற்றாமையால் தலைவி வருந்தி கூறினாள்.