பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


237. அறனிலாலன் ஆயினும் வரின் அணைப்பேன்! செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் காணார் முதலொடு போந்தெனப், பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் பேதை நெய்தல் பெரு நீர்ச் சேர்ப்பற்கு யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, அறனிலாளன் புகழ, எற் பெறினும், வல்லேன்மன் - தோழி, - யானே.

- அம்மூவனார் நற் 275 "தோழி, செந்நெல் அறுக்கும் உழவர் கூரிய அரிவாள் கொண்டு வயலில் இருக்கும் நெற்கதிரோடு நெய்தல் மலரை யும், அது அறுபடுமோ என்று காணாது சேர்த்து அறுப்பர். பேதை நெய்தல் மலர் அரிவாளோடு கதிரோடும் கலந்து நெல்லரிப் படுக்கையில் கிடந்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தை அறியாது மெல்ல மெல்ல ஞாயிற்றின் கதிரைக் கண்ட போது இனிய துயில் விலகி நெல்லரியிலிருந்து தன் பசிய வாயைத் திறக்கும். இவ்வாறாய கடற்கரைத் துறைவன் நம் தலைவன். யான் அவனை நினைந்து வருந்தவில்லை. குறித்த காலத்தில் வாராததால் அவன் அறனிலாளன். ஆனாலும் அயலார் புகழும்படி மீண்டும் வந்தடைந்து என்னைப் பெறினும், யான் என் நோய் நீங்கி அவனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்” என்று தலைவி வன்புறை எதிர் மொழிந்தாள்.

238. பொருளொடு வந்தான்் புரிக திருமணம்

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, பொன்னின் அன்ன தாது படு பல் மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் நெய்கனி பசுங் காய் தூங்கும் துறைவனை