பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

141


இனி, அறிந்திசினே, கொண்கன் ஆகுதல் - கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி குளம்பினும் சேயிறா ஒடுங்கின; கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.

- உலோச்சனார் நற் 278

"பொருந்திய வயிரம் தோன்றிய பருத்த அடியையுடைய புன்னை மரத்தின் அரும்புகள், அழிந்த பெருங் குரும்பையின் கொப்புளம் போன்றவை, வாய் திறந்து மலர்ந்தன. பொன் போன்ற தாது மிக்க பல மலர்களில் சூடுவோர் கொய்து தொடுத்தன போக எஞ்சியவை கிளைகள் தோறும் புன்னை யில் நெய்கனியும் பசிய காயாகத் தொங்கும் அவ்வாறாய கடற்றுறையுடைய தலைவனை இப்போது அறிந்தேன் உப்பங்கழிக் கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட கால்களை யுடைய கோவேறு கழுதைகள் தலைவனின் தேரில் பூட்டப் பட்டிருக்கும். அவற்றின் குளம்பெங்கும் சிவந்த இறால் மீன்கள் ஒடுங்கியிருக்கும். அவனது மார்பு மாலையிலும், பிறவற்றிலும் காற்று எறியும் வெண்மணல் ஒடுங்கியிருக்கும்! அவன் உனக்குக் கணவன் ஆவதற்கு வந்தனன் போலும் என்பது இப்போது தான்் யான் அறிந்து கொண்டேன்" என்று மகிழ்ந்து கூறினாள் தோழினாள்.

239. வருத்தம் செய்பவர் ஆகலாமா? ஒள் நுதல் மகளிர் ஒங்கு கழிக் குற்ற கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ! - வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, இன்னை ஆகுதல் தகுமோ - ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, ஏமுற விளங்கிய சுடரினும், வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

- மதுரை மருதன் இளநாகனார் நற் 283 “ஒளியுள்ள நெற்றியுடைய மகளிர் சிறந்த உப்பங் கழியினில் பறித்த நறுமணம் கமழும் நெய்தல் மலர்கள் பெண்கள் கண்களைப் போல் அழகுள்ளவை அவை, அகன்ற