பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அவர் இட்ட சிவந்த கோலையும் வலித்துக் கட்டிய முடியை யும் உடைய அழகிய வலையைக் கிழித்துச் சென்று கடுமை யான வலிமையால் எறியும் சுறாமீன் கடலில் வழங்கும். அவ்வாறாய நெடுநீர்ச் சேர்ப்பன் தன் உள்ளத்தில் என்னை நினைப்பதுண்டா? தொன்றுதொட்டு உறையும் கடவுள் சேர்ந்த பருத்த அடியையுடைய ஊர்ப்பொது மன்றத்தி லுள்ள பனைமரத்தின் வளைந்த மடலில் உள்ள கூட்டில் தன் பெடையோடு சேர்ந்திருக்கும் அன்றிலின் வருத்தம் தரும் குரலைக் கேட்கும் தோறும். நன்னுதல் தலைவி, உறங்காத கண்ணையுடையவளாய், துயர் வருத்துதலானே உடல் மெலிந்தாளாய் நம் காரணமாக வருந்துவாளே” என்று எண்ணுதலும் உண்டா? ஆராய்ந்து கூறுக” என்று கழி காமம் தாங்க முடியாத தலைவி தலைவன் கேட்ப தோழி யிடம் வினவினாள்.

245. வருபவன் காணாமல் வருந்துக சிறிதே!

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த திதலை அல்குல் நலம் பாராட்டிய வருமே - தோழி, - வார் மணற் சேர்ப்பன்: இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை மாஅரை மறைகம் வம்மதி - பானாள், பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் மெல் இணர் நறும் பொழில் காணா அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே.

- அம்மூவனார் நற் 307 "தோழி, விரைவாகச் செல்வதில் மனமுள்ள குதிரை பூட்டிய பெரிய தேரின் மணியும் இசைக்கும். தேரோடு பெயர்ந்து நடந்து வரும் இளையரும் ஆரவாரம் செய்வர். கடலில் நீராடும் அகன்ற இடத்தில், பெரிய அழகாக விளங்கிய திதலை பரவிய அல்குலின் நலத்தைப் பாராட்டிய வார்மணல் சேர்ப்பன் வருகின்றான். எனவே வீட்டின் உட்பக்கம் வளைந்த குடமுழாப் போன்ற அடிமரத்தை