பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

147


யுடைய புன்னையின் கரிய அடிப்பாகத்தில் ஒளிந்து கொள் வோம், வா இந்தப் பாதிநாள் இருட்டில் பூக்கள் விரிந்த சோலையில் கூடும் இடத்தில் வந்து மெல்லிய பூங்கொத்து களையுடைய நறுமணமுள்ள பொழிலில் நம்மைக் காணாமல் அவன் படும் அல்லல் அரும்படரை நாம் சிறிது காண்போம்" குறி நீட ஆற்றாளாகிய தலைவியிடம் தோழி கூறினாள்.

246. தேர் ஒலி கேட்டல் அரிதாகிவிட்டது!

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, பெயினே, இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, வறப்பின், இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், அழியா மரபின் நம் மூதூர் நன்றே - கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச், சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; ஒன்றே - தோழி, - நம் கானலது பழியே, கருங் கோட்டுப் புன்னை மலர்த்தாது அருந்தி, இருங்களிப்பிரசம் ஊத, அவர் நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

- உலோச்சனார் நற் 311 "தோழி, அழியாத மரபினையுடைய நம் ஊர் நல்ல தொன்றாகும். மழை பெய்யின், ஒட விட்ட குதிரையின் பிடரி மயிர்போல மிகுந்து தோன்றிப் பெரிய கதிர்களைக் கொண்ட நெல்லின் புது வருவாயை உடையதாய் இருக்கும். பெய்யா தொழியின், சிறந்த நீரிலிருக்கும் முள்ளிச் செடியின் மலர் உதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிடமெங்கும் வெள்ளை நிற உப்பு விளையும். இவை தவிர, கொழுத்த மீனைச் சுடும் புகை, தெருவினுள் கலந்து சிறிய மலருடைய ஞாழல் மரங்களுள்ள துறையும் னிதாய் இருக்கும். ஆனால் நம் கடற்கரைச் சோலை யொன்றுமே ஊரார் எடுக்கும் ஒரு பழியுடையது. கரிய கிளை க்ளையுடைய புன்னை மர மலரிலுள்ள தேனை அருந்திக் க்ளிப்புடைய கரிய வண்டுகள் ஒலிக்க, அவர் நெடுந்தேரின்