பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

13


соврае в воёва, 11. பிரிவுத் தாங்கி வாழ்கின்றோம்!

அம்ம வாழி, தோழி பாணன் சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளிஇச் சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே - அருந் தவம் முயறல் ஆற்றாதேமே? - grš #ff தலைவி, "தோழியே, இதனைக் கேள். சுற்றியுள்ள கழியில் வாழும் சினையுடன் கூடிய கயல் மீன்களைப் பாணன் தூண்டிற் கயிற்றால் இரை கொள்ளுமாறு செய்து பிடிக்கும் துறைவனின் நட்பைப் பிரியாது பெறுவதற்குரிய அரிய தவத்தைச் செய்திலேமாகலின் பிரிவுத் துன்பத்தைத் தாங்கி இங்கு உயிர் வாழ்வோம் ஆனோம்” என்று சொன்னாள்.

12. வரக் காண்போம்!

அம்ம வாழி, தோழி! பாசிலைச் செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன் தான்் வரக் கர்ண்குவம் நாமே, மறந்தோம் மன்ற,நானுடை நெஞ்சே. - ஜங் 112 தலைவி தன் தோழியை நோக்கி, "தோழியே கேள், பசுமையான இலைகளை உடைய செருந்தி மரத்தின் கிளை கள் பரவிய பெரிய கழியையுடைய சேர்ப்பன் நம்மைத் தெளிவித்த போது கூறியவற்றை நாணம் உடைமையால் நாம் முழுதும் மறந்தோம் நம்மை என்றும் மறவாத மாண்புடைய மனம் உடையவனாதலால், இனி நாமே அவன் வரக் காண் போம். அஞ்சாதே" என்று உரைத்தாள்.

13. நிகழ்ந்தது இதுவே! அம்ம வாழி, தோழி நென்னல் ஒங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டு என மொழிய, என்னை அது கேட்டு அன்னாய் என்றனள், அன்னை, பைபய எம்மை என்றனென், யானே. - ஐங் 113