பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

153


கத்துகிறது. நல்ல யாழ், இவையெல்லாம் தவிர, விரலால் வாசிக்கப் படுவது யாமம் வரை வாசிக்கப்படுகிறது என் காமம், இவை யாவற்ற்ாலும் பெரிதாகிறது. அக் காமத்தைக் களையும் தலைவர் அருகில் இல்லையே” என்று காதற் காம மிகுதியாள் வருந்தி சொன்னாள் தலைவி

253. குருகு துணை கூப்பிடல் நிறுத்தவில்லையே! கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; 'நிறுத்தல் வேண்டும் என்றி, நிலைப்ப யாங்ங்ணம் விடுமோ மற்றே!-மால் கொள வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் நற் 338 "தோழி, கடுமையான வெப்பக் கதிர்களையுடைய ஞாயிறு மலையில் மறைந்தது. அடும்பின் கொடி துணிபட ஊடறுத்த அவரின் நெடிய தேரின் இனிய ஒலி தோன்றும் இரவும் வரவில்லை என்னைக் காமநோய் மிகவும் வாட்டும். ஆனால் அந் நிலையைப் “பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று நீ சொல்கிறாய். பொறுத்துக் கொண்டிருக்க எப்படி விடுமோ? தெரியவில்லை. யான் மயக்கம் கொள்ளத் துன்பம் செய்யும் அழகிய நாரை அகன்ற கரிய நெய்தல் நிலப் பரப்பில் எழுந்து சென்று இரை தின்னும் புலவு நாறும் நம் சிறுகுடி மன்றத்தில் உயர்ந்த காற்றாலசையும் பருத்த அடி மரத்தையுடைய பனையின் தொகுதியான மடலில் நாரை ஏறி உட்கார்ந்திருக்கும். வளைந்த வாயையுடைய பேடை குடம்பை சேர, என் உயிர் பிரியும்படியாகச் செலுத்தித், தன்