பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பின்னிலை முனியா நம் வயின், என் என நினையும்கொல், பரதவர் மகளே?

- மிளைகிழான் நல்வேட்டனார் நற் 349 “விரைந்த தேரில் ஏறிச் சென்றும், காலால் நடந்து சென்றும், வளைந்த கழியின் பக்கத்தில் அடும்பு மலரைக் கொய்தும், தாழம்பூவைப் பறிக்க அசைத்தும், நெய்தல் மலரைப் பறித்தும், முயங்கியது போலக் கருதிய நெஞ்சத் தோடு நாள்தோறும் இத் தன்மையம் ஆனோம். அப்படி யிருக்க, அழகுறச் செய்த மாலையணிந்த பசிய கலன்களை யுடைய வேந்தர்கள் போரிலே மடிந்த பாசறையில், வேல் விளங்கும் போர்க்களத்திலே யானை சாகும்படி, போர் செய்து, பெரும் புண்பட்டுக் கிடந்தாரைப் பேய் காத்தது போல இத் தோழியின் செயல் இருக்கிறது. இவன் பின்னின்று வெறுப்படையாது திரியும் நம்மிடத்து நம் காதலியாகிய பரதவர் மகள் என்ன என்று நினைப்பாளோ? தெரியவில்லையே” என்று தலைவன் தோழி கேட்பத் தன்னுள்ளே கூறினாள்.

257 நட்பு அலர் ஆகிறது உப்பளம் போல! தான்் அது பொறுத்தல் யாவது - கானல் ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த கானல் நண்ணிய வார் மணல் முன்றில், எல்லி அன்ன இருள்நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் அளம் போது ஆகுலம் கடுப்ப, கெளவை ஆகின்றது, ஐய, நின் நட்பே?

- உலோச்சனார் நற் 354 “ஐய, நெய்தற் கானலில் காற்றால் ஆடும் அடியிலுள்ள ஒலையை வெட்டி ஒழித்தலால் நெடிய கரிய பனையின் வீழும் முற்றின ஒலையில் சூழ்ந்த காவலாகக் கட்டிய