பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வரச் செல்வோமா தோழி. பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையை யுடைய முடங்கலைச் சிறிய வெள்ளிய காக்கை நாட் காலையின் இரையாகப் பெறும். பசிய பூண் களையணிந்த பாண்டியனின் மருங்கை என்னும் ஊர் போன்ற என் பெறுதற் கரிய சிறந்த அழகு தொலையுமாறு என்னை விட்டுப் பிரிந்து அங்கே தங்கியிருக்க வல்ல தலைவர் பொருட்டு வணங்கி வரச் செல்வோமா?” என்று பொருள் தேடச் சென்ற தலைவன் பிரிந்தபோது ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறினாள்.

259. கொண்டுவருவது மணலையா? மனத்தையா? 'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என வியம் கொண்டு ஏகினை ஆயின், எனையது உம் உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப பைந் தழை சிதையக், கோதை வாட, நன்னர் மாலை, நெருநை, நின்னொடு சில விளங்கு எல் வளை ஞெகிழ அலவன் ஆட்டுவோள் சிலம்பு ளுெமிர்ந்து எனவே.

- உலோச்சனார் நற் 363 “மிக்க நீர் பொருந்திய சேர்ப்பனே, பசுமையான தழை யுடை சிதைய, பூமாலை வாட, சிலவாய் விளங்கும் ஒளி யுள்ள வளையல்கள் கழல, நேற்று மாலைப்பொழுது உன் னோடு சேர்ந்து நண்டோடு விளையாடிய என் தோழியின் நல்ல சிலம்புகள் உடைந்தன. “கண்டல் மர வேலியுடைய கழிகள் சூழ்ந்த கொல்லைகளை யுடைய தெளிந்த கடல் நாட்டுச் செல்வன் யான்” எனச் சொல்லி வழிக்கொண்டு போயினாய். ஆனால் எத்துணையளவேனும் தான்் செய்த தொழில் உலைவுக்குத் தளராது தோல்வி கொள்ளாத கம்மியன் அணிகலனின் மூட்டுவாய் நீங்கிப் போயின் இணைத்துச் சந்து ஊதிக் கூட்டுதற்கு மண்கூட்ட வேண்டு