பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

159


மன்றோ! எனவே அதற்கு மண் எடுக்கும் நீர்த்துறையி லுள்ள மணலைக் கொண்டுவந்து தந்து செல்க' என்று பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் தலைவியை நீயே ஆற்றுவி என்றாள் தோழி.

260. காம வெள்ளத்தை எங்ங்ணம் நீந்துவேன்?

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, எல்லை பைபயக் கழிப்பிப், பெரும் புன் மாலை இன்றும் வருவது ஆயின் நன்றும் ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் கங்கை அம்பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் சிறை அடு கடும் புனல் அன்ன என் நிறை அடு காமம் நீந்துமாறே. - மதுரை மேலைக் கடையத்தார் நல்வெள்ளையார் நற் 369 "தோழியே, ஞாயிறு வெம்மை தணிந்து மேற்குன்றில் சேர்ந்தது. நிறைந்த சிறகுகளையுடைய நாரைக் கூட்டம் விசும்பிலே நெருங்கிப் பறந்து சென்றன. பகற்பொழுது மெல்ல மெல்லக் கழிந்தது. முல்லை அரும்பு மலர்ந்த பெரிய புல்லிய மாலைக்காலம் இன்றும் வருமாயின் நல்லதா, தீயதா என்று யான் அறியேன். ஞெமை, மரங்கள் வளர்ந்த உயர்ந்த மலையாகிய இமைய மலையில் உச்சியில் தோன்றி, வானி லிருந்து கீழே இறங்கி, விளங்கிய வெள்ளை நிறமான அருவியாகி, கங்கையாறு என்ற பெயர் பெற்று, கரையைக் கடந்து, அணைகளை உடைத் தெறியும் கடும்புனல் போல எனது நிறையை அடித்துக் கொண்டு போகும் என் காமம். இக் காம வெள்ளத்தை யான் நீந்துவது எங்ங்னம்? அதனை அறியேன்” என்று மனவாது பொருள் தேடப் பிரிந்த தலை வனை எண்ணித் தலைவி உரைத்தாள்.

261. அண்டதற்கு இளையல்

அழிதக்கன்றே - தோழி, கழி - சேர்பு P கானற் பெண்ணைத் தேனுடை அளிபழம்,