பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"தோழி, வாழ்க, யான் கூறுவதைக் கேள். வலிமையான புரிகளால் ஆன கயிற்றின் நுனியிலே கட்டி, நீரில் விரைந்து செல்ல திண்ணிய மீன் படகிலே, எறியும் ஈட்டியாகிய உளி யோடு செல்லும் பரதவர் ஒள்ளிய விளக்குகளைக் கொளுத் திக் கொண்டு நடுநாளில் செய்யும் வேட்டைக்குப் போய்ச் சாலையில் கடலில் பிடித்த மீன்களைக் கொண்டு வந்து கடற்கரைச் சோலையில் குவிப்பர். உயர்ந்த கரிய புன்னை மரத்தின் செறியாத நிழலிலிருந்து தேன்மணம் கமழும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தோடு குடித்துப் பெரிதும் மகிழ்வர். அவ்வாறான துறைவன் எம் சிறிய நெஞ்சத்திலிருந்து நீங்கு வதை அறியாது உள்ளான். அப்படியிருந்தும் என் நல் துதலுக்குப் பசப்பு எப்படி வந்தது?" என்று மணநாள் நீள் கையில் தலைவன் ஒருபுறம் இருக்க தலைவி வினவினாள்.

267. அம்ம வருக செம்மல் நெஞ்சமொடு கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி உழை கண் சீறுர் நன் மனை அறியின் நன்றுமன் தில்ல; செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம் பானாள், முனி படர் களையினும் களைப நனி போர் அன்பினர் காதலரோ.

- மதுரை மருதன் இளநாகனார் நற் 392 “தலைவியே, நம் காதலர் மிகப் பெரிய அன்பினர். அவர் நடுநாள் இரவில் வந்து நம்மை வருத்தும் துன்பத்தைப் போக்கினாலும் போக்குவார். கடும் முயற்சியுடைய தந்தை ஒருவன் கொடிய சுறாமீனை எறிந்தான்். ஒலிக்கும் பெரிய கடலில் வேட்டைக்குச் செல்லும் போது அவன் தன் சிறு வர்களை உடன் அழைத்துக் கொண்டு செல்லாமல் மனை யில் நிறுத்திவிட்டுச் சென்றான். மனையிலிருந்து அழுது