பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

165


ஒய்ந்த பின், புல்லிய தலையுடைய அச் சிறுவர்கள் கடுமை யான முயற்சியெடுத்து இனிய கண்ணையுடைய பனை நுங்கைப் பெற்று உண்டு மகிழ்ந்தனர். அம் மகிழ்ச்சி, பருத்த மைந்த விருப்பமுண்டாக்கும் கொங்கையின் பயனைப் பெற்று மகிழ்ந்தது போன்றிருந்தது அப்படி வளமான பனை வேலி சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய சிறிய ஊரில் நமது நல்ல மனையை அறிந்த காதலர் வந்தாரானால் மிகவும் நல்லது. அவர் செம்மல் உள்ளத்தோடு தாமே வந்து நம்மைக் காணாது கடற்கரைச் சோலையொடு மனம்

அழிந்து வருந்துவர் போலாம்” என்று இரவுக் குறிக்கு ஒப்பிய தலைவி செப்பினாள்.

268. இழந்த அழகைத் தந்துவிடுக யாரை, எலுவ? யாரே நீ எமக்கு யாரையும் அல்லை; நொதுமலாளனை; அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின் கடும்பகட்டு யானை நேடுந் தேர்க் குட்டுவன் வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் கடல் கெழு மரந்தை அன்ன எம் வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே.

- அம்மூவனார் நற் 395 “எலுவ! நீ யார்? நீ யாரோ? நீ எமக்கு யாரும் இல்லை. அயலானைப் போன்றவனே. நம்மிடையுள்ள தொடர்பை ஆராய்ந்தால் அவ்வளவுதான்், தலைவ, கடிய வலிமையான யானை, நெடிய தேர்களையுடைய குட்டுவன், பிற வேந்தர்க ளோடு போரிடும் போர்க்களத்தில் முழங்கும் முரசொலியைப் போன்று கடல் அலை முழங்கும். அங்கே பாய்ந்து தின்று விட்டு மாலைநேரத்தில் வீடு திரும்பும் அவ்வாறாய கடற் துறை வளப்பமுடையது மராத்தை என்னும் ஊர். அந்த ஊர் போன்ற அழகுடையவள் தலைவி. நீ எம்மை விரும்ப வில்லையாதலால் இழந்த அந்த அழகைத் தந்து விட்டுச்