பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

169


கடற்பரப்பினின்று கொணர்ந்த கொழுமையான மீனின் வற்றலை உண்ணவரும் பறவைகளை ஒட்டுவோம்; சிவந்த நண்டின் ஆழமான வளைகளையெல்லாம் தோண்டுவோம்; வளைந்த உப்பங்கழிக் கரையில் உள்ள தாழையின் விழுதால் ஆன கயிற்றால் ஞாழல் மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய ஊசலில் ஆடுவோம். கீழைக்காற்று கொணர்ந்து குவித்த மணலில் குரவைக் கூத்தாடுவோம் இவற்றை வெறுத்தால் வெண்மையான தலயையுடைய கடல்நீரில் தோழியருடன் விளையாடி அழகிய மலர்களால் ஆன பசிய தழையுடையை அழகு பொருந்த உடுத்திய கடற்கரைச் சோலையில் நாம் தலைவருடன் தங்கியும், வருவோம் இவ்வாறு தங்கி வருதலைப்பற்றி, ஊரில் அலர் கூறுதல் என்ற நல்ல பேய் பிடித்திருக்கும், கொடியவற்றையே பேசும் பெண்களின் சொல்லைக் கேட்டு நம் தாய் பெரிய துறையகத்து இரவு பகல் என்னாது, பாகன் ஆய்ந்து கொண்ட குதிரை பூட்டப் பெற்று, நிலவு போன்ற மணலில் கல் என்ற ஒலியுடன் சுழன்று திரியும் ஒரு தேர் உண்டு என எங்கும் கூறும் அலரை நினைத்து, வீட்டில் காவலை ஏற்படுத்தியுள்ளாள்! என் செய்வோம்? என்றாள் தோழி

272. கெடுவது யாது இல்லில் தங்கினால்? நெடுங் களிறு வலந்த குறுங் கண் அவ் வலை, கடல் பாடு அழிய, இன மீன் முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, உப்பு ஒய் உமணர் அருந் துறை போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழிஇ, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, பெருங் களம் தொகுத்த உழவர் போல, இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி, பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! பெருமை என்பது கெடுமோ - ஒரு நாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்