பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வெவ் வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினும், மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, பகலும் நம்வயின் அகலானாகிப் பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, 'வாராதோர் நமக்கு யாஅர்? என்னாது, மல்லல் மூதூர் மறையினை சென்று, சொல்லின் எவனோ - பாண எல்லி மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண் என, கண் நிறை நீர் கொடு கரக்கும், ஒண் நுதல் அரிவை, யான் என்செய்கோ? எனவே.

- கருவூர்ப் பூதஞ்சேந்தனார் அக 50 பாணனே! குளிர்ந்த நீரையுடைய கடற்கரைத் தலைவ னான நம் பெருமான், களவொழுக்கத்தில், காற்று வீசாது ஒடுங்குவதால் ஒலியின்றி அமைதி அடைதலால், பரதவரின் கடலில் செலுத்தும் தோணிகளும் கடலில் செல்லாமல் நீங்கின. பெரிய நெய்தல் நிலத்துக்குரிய ஓடைகளில் கொடிய சுறாமீன்கள் அஞ்சாது செருக்கித் திரிகின்றன கொடிய சொற்களைப் பேசும் இயல்புடைய பெண்கள் தம் பழியை ஊர் அறியத் தூற்றினர், அவற்றுக்கு எல்லாம் அஞ்சாமல் வருவான் தலைவன் சிறந்த இழையையுடைய நீண்ட தேர் தான்் மீண்டு வருதலை எதிர்பார்த்து நீண்ட பொழுது நிற்பினும், பகற் காலத்திலும் நம்மிடத்தினின்றும் பிரியாதவ னாகி அடிக்கடி வருவான் அது இப்போது குறைந்து விட்டது "இனிக் களவுக் காலத்துக் கூடுவதற்கரிய வேட்கை நீங்கிவிட்டதால் தாம் போயிருக்கும் இடத்தைவிட்டு வாரார் நமக்கு எத்தகைய உறவினர் ஆவர் என்னாமல் ஒளியுடைய நெற்றியையுற்ற தலைவி, இரவில் வீட்டைச் சார்ந்திருக்கும் பனை மரத்தில் ஒன்றியிருத்தலினின்றும், துணை சிறிது பிரிந் தாலும் வளைந்த வாயை உடைய அன்றில் பறவைகள் துயிலாமல் இருப்பதைக் காண்பாயாக கண்ணில் நிறையும் நீரைக் கொண்டு தன் பிரிவாற்றாமையை மற்றவர் அறியாமல் மறைப்பாள்! இதற்கு யான் என்ன செய்வேன்” என்ற இதனை