பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

173


வளம் பொருந்திய பழைய ஊரில் மறைந்து சென்று நம் தலைவர்க்குச் சொல்லின் என்ன தவறாகும்? என்று தோழி பாணனிடம் கூறினாள்.

275. கை விடுக அடிக்கடி வருவதை

பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; 'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை கோதை ஆயமொடு வண்டல் தைஇ, ஒரை ஆடினும் உயங்கும் நின்ஒளி எனக் கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.

- குடவாயிற் கீரத்தனார் அக 60 பெரும பெரிய கடல் பரப்பில் சிவந்த இறால் மீன், நடுக்கம் கொள்ளக் கொடிய தொழில் செய்து பிடித்துக் கொள்வதற்குக் கருவியான கோல்களை உடைய அழகிய வலைகளுடன் நெடிய திமிலில் அத் தொழிலில் கருத்துக் கொண்டு தங்கியவன் தந்தை பரதவன். அப் பரதவனுக்கு அவனுடைய மகள் உப்புக்கு விலையாய்ப் பெற்று நெல்லினது அரிசியால் ஆன வெண் சோற்றின் மீது அயிரை மீனை இட்டுச் சமைத்த அழகிய புளிக்கறியைச் சொரிந்து, கொழு விய மீன் கருவாட்டுப் பொறிக்கறியுடன் உண்ணத் தருவாள். இத்தகைய நிகழ்ச்சி நிகழ்வதற்கு இடமான, திண்மையான தேரையுடைய சேர மன்னனின் தொண்டிப் பட்டினம் போன்ற எம் தலைவியான ஒளி பொருந்திய வளையவை கொண்டவளைப் பகற் குறியிடத்து அடிக்கடி வந்து வருத்