பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தாதே! அதற்குக் காரணம் எதுவென்றால் வாடைக் காற்றால் குவிக்கப்பட்ட உயர்ந்த மணற் குன்றமான நீர்க்கரையில், மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் கட்டி விளையாடி னும், அறப்பண்பற்ற எம் தாய் 'உம் உடம்பின் ஒளி குன்றும், அங்குப் போகாதே’ எனக் கடிந்து வீணே சினம் கொள்வாள். அத்தகையவள் உன் வருகையை ஒரு முறை கண்டால், வெற்றி வேலையும் கொற்றத்தையும் பெற்ற சோழ மன்னர் குட வாயில் என்ற நகரத்தில் பாதுகாப்புடன் வைத்த பகைவர் திறையாகக் கொடுத்த செல்வத்தை விட மிக அரிய காவலில் வைத்துப் போற்றுவாள். எனவே இங்ங்னம் வாராதே! என்று தோழி கூறித் திருமணத்திற்கு ஆவன செய்க என்றாள்.

276. அடங்கியது ஊர் கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே வதுவை கூடிய பின்றை, புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் கானல்அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் வென் வேற் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரும் பெளவம் இரங்கும் முன் துறை, வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல, ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. - மதுரைத் தமிழக்கூத்தனார் கடுவன் மள்ளனார் அக 70 வளைந்த படகைக்கொண்ட பரதவர் கடலில் ஆடிய மீன் வேட்டை நன்றாய் அமைந்திட, பெரிய புலால் நாற்றம் கமழும் சிறிய குடில்களையுடைய தம் ஊரில் புகுந்து குறுகிய