பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

175


கண்களையுடைய அழகிய வலையின் பயனைப் பாராட்டினர் பின் தாம் கொணர்ந்த கொழுவிய அயிரை மீனைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்ந்தனர் இத்தகைய இடமான கடல் துறையையுடைய நம் பெருமான் நம்முடன் கொண்ட காதல் தொடர்பானது முன் அலர் கூறும் வாயையுடைய பெண்டிர் அம்பலாக்கிப் பரப்பப் பலரும் அறிந்தனர் இப்போது மணம் கைகூடிற்று இதன் பின்பு புலிநகக் கொன்றையின் புதிய பொன்நிற மலர்களுடன் புன்னையின் மலர்கள் உதிர்ந்து ஒவியத்தை வரைந்தாற் போல் அழகு செய்யும் கடற்கரைச் சோலை. பக்கத்தில் அமைந்துள்ள வயல்களின் கரிய நீரில் பசுமையான இலைகளை யுடைய திரண்ட தண்டினையுடைய நெய்தல் மலர்களை விழாக்களுக்கு ஒப்பனை செய்யும் மகளிர், தம் தழையுடைக்கு அழகுபெறச் சேர்ப்பர்; இவ் வகை இயல் புடைய வெற்றிவேலை ஏந்திய பாண்டியரின் மிகுந்த பழமை உடைய திருவணைக் கரையின் அருகில், ஒலிக்கும் இயல்புடையதான் பெரிய கடலின் துறையில் பறவைகள் ஒலிக்கும் ஆரவாரத்தை, வெல்லும் போரில் வல்ல இராமன் வெல்வதற்குச் செய்யும் போர் பற்றிய அரிய மறைச் செய்தியை வாணர வீரர்களுடன் ஆராயும் பொருட்டுப் பறவைகளின் ஆரவார ஒலியைக் கை கவித்து அடக்கிடச் செய்த பல விழுதுகளையுடைய ஆலமரம் போன்று இந்த ஆரவாரம் கொண்ட ஊர் குரலடங்கப் பெற்றது என்று தோழி தலைவி யிடம் சொன்னாள்

277. அரியவர் அல்லோம் உனக்கு

கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் வந்தோய்மன்ற - தண் கடற் சேர்ப்பlநினக்கு எவன் அரியமோ, யாம? எந்தை புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த பல் மீன் உணங்கற் படுபுள் ஒப்புதும், முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,