பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்

'

இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் தண் நறும் பைந் தாது உறைக்கும் புன்னை.அம் கானல், பகல் வந்தீமே.

- மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் அக 80 குளிர்ந்த கடற்கரையை உடைய தலைவனே! நீதான்், வளைந்த காலையுடைய முதலையுடன் சுறாமீன் இயங்கும், கரிய உப்பங்கழிகள் நெருங்கிய அரிய வழிகளைக் கடந்து இரவில் இங்கு வந்தனை இங்ங்னம் நீ துன்பம் மிக்க நெறி யில் வருவதற்குப் பெருந்தகையான உனக்கு யாங்கள் எப்படி அரியவர் ஆவோம்? இது எமக்கு விளங்கவில்லை! நீ இங்ங்னம் இரவில் அரிய வழியில் வராதே அதை எம் தலைவி பொறுத்துக் கொள்ள மாட்டாள் நாளைப் பகலில் யாங்கள் எம் தந்தை, அலைகள் பொருந்திய கடல் பரப்பில் புகுந்து நீரைத் துழவிக் கொண்டு வந்த பலவகைப்பட்ட மீன்களின் வற்றலில் பொருந்தும் பறவைகளை ஒட்டும் தொழிலில் ஈடுபட்டிருப்போம் ஆதலால் - நீர் முள்ளிச்செடி தழைத்திருக்கும் கடலின் நீரடை கரையில் படர்ந்துள்ள ஒள்ளிய பலவான மலர்களை உடையவும் கவடுபட்ட இலைகளைக் கொண்டதும் ஆகிய அரும்பு அந்த அரும் பினது சிவந்த மெல்லிய கொடிகளை உன் தேரின் உருளை கள் அறுத்து வரும்படி, மணிகளைப் பூண்ட ஒர் இனமான குதிரைகள் பூட்டிய பெருந் தேரைச் செலுத்தி, ஒளியுடைய இலையுடன் பொலிந்து விளங்கும் பூங்கொத்துகள் மலர்ந்த பொன் போன்ற குளிர்ந்த மணமுடைய பூந்துகள் களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் அடர்ந்த அழகிய கடற்கரைச் சோலையில் பகற் போதிலேயே வருவாயாக என்று தலை வனிடம் தோழி செப்பினாள்.

278, மணக்க எண்ணுவாயாக மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி இளையோர் ஆடும் வளிமனை சிதைக்கும் தளை அவிழ் தாழைக் கானல்அம் பெருந் துறை, சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,