பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

177


இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், 'நீங்குக' என்று, யான் யாங்ங்ணம் மொழிகோ? அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணா.அது பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்.ஆயினும், 'உறும் எனக் கொள்ளுநர்அல்லர் - நறு நுதல் அரிவை பாசிழை விலையே

- மதுரை மருதனின் நாகனார் அக 90 ஐயனே! முதியவரைப் போன்ற வெண்மையான தலையை உடையது கடல். இளம் பெண்கள் விளையாடும் மணல் வீட்டை அழிப்பதற்கு இடமான மடல் விரிந்து மலரும் தாழையை யுடைய கடற்கரைச் சோலையிடத்தே நிகழ்ந்த ஒரு சில மகளிர் செவிகளில் மட்டும் பட்டிருந்த உங்களது இயற்கைப் புணர்ச்சி, பின்பு அலராக எங்கும் பரவியது. அதனால் எம் உறவினர் தலைவியை இல்லில் இருக்கச் செய்தமையை நீ அறியவில்லை. பல நாளாக நீ வளர்கின்ற முலையையுடைய எம் தலைவியை நின் அழகிய பெருமையை யுடைய மார்பினால் வருத்திச் சுழலும் நெஞ்சத்துடன் வருந்தும் உன்னிடம் நீ இங்ங்ணம் வராதே என்று எவ்வாறு சொல்வேன்? இவளுடைய தந்தை மணக்கும் நெற்றியை யுடைய அரிவையான இவளது பசிய அணிகளுக்கு விலை யாய், அரிய வலிமை வாய்ந்த தெய்வங்களைக் கொண்ட செல்லுரரின் கிழக்கில், உள்ளதான் பெரிய கடல் போன்ற ஆரவாரத்தைக் கொண்ட இரும்பால் இயன்ற படைக்கலங் கள் உண்டாக்கிய வடுக்களைப் பெற்ற முகமுடையவரான அஞ்சாமையுடைய கோசரி. நியமம் என்ற ஊரையே தந்தாலும் அது போதும் எனக் கொள்ள மாட்டார், என்று பகலில் வந்து மீளும் தலைவனிடம் தோழி கூறினாள்.

279. அலர் எழுந்தது நாரைகள் ஒலி போல

அரையுற்று அமைந்த ஆரம் நீவி, புரையப் பூண்ட கோதை மார்பினை,