பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அன்பு இலன் மன்ற பெரிதே -

மென் புலக் கொண்கன் வாராதோனே! - ஐங் 19

தலைமகள் தன் தோழியை நோக்கி, “தோழியே, கேள்: நெய்தல் நிலத்தையுடைய தலைமகன் மணந்து கொள்வதற் குரிய நல்ல நெறியை அறியாமையால் அதற்குக் காரணமான வற்றை மேற்கொண்டு ஒழுகுகின்றமையால் அவன் பெரிதும் அன்பற்றவன் ஆவான்.அன்புடையவனாயின், இவை செய்யாது மணத்தற்கு வேண்டுவனவற்றைக் கொண்டு வாராதிரான்” என்று சொன்னாள்

20. தோள்கள் நலம் பெற்றன: அம்ம வாழி, தோழி! நலம்மிக நல்ல ஆயின, அளிய மென் தோளே - மல்லல் இருங்கழி நீர் அறல் விரியும் மெல்லம் புலம்பன் வந்தமாறே: - ஜங் 120 தலைவி, "தோழியே, கேட்பாயாக வளமான பெரிய கழியில், நீர் மிகுந்து பரவும். நெய்தல் புலங்களையுடைய தலைவன் வந்ததால், நலம் கெட்டு அளிக்கத் தக்கவாகிய எம்முடைய மென்மையான தோள்கள் முன்பு போல் நலம் மிக்கனவாயின” என்று சொன்னாள்.

தலைவனுக்கு-உரைத்தது. 21. கடலில் ஆடினாள்

கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே?

முண்டகக் கோதை நனையத்

தெண் திரைப் பெளவம் பாய்ந்து நின்றோளே! - ஐங் 121

“நெய்தல் நிலத்தலைவனே, நின் நட்பாயினாளை யாம் நன்கு அறிந்துள்ளோம். அவள் கழிமுள்ளி மலரை அணிந்த தன் கூந்தல் நனையும் வண்ணம் தெளிவான திரையை உடைய கடலில் படிந்து விளையாடினாளாகலான் என்றாள் பரத்தை