பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தாயே, இவள் ஏன் இவ்வாறு ஆனாள் என்பதை யானும் அறியேன் என்றாலும் யானும் தலைவியான இவளும் மாலை போல் எங்களைத் தொடர்ந்து வரும் தோழியர் கூட்டத்துடன் சென்று கடலில் ஆடினோம்; கடற்கரைச் சோலையில் மணல் வீடு கட்டியும் சிறு சோறு சமைத்தும் விளையாடினோம் இவற்றால் எங்களுக்கு உண்டான வருத்தம் நீங்க யாம் சிறிது இளைப்பாறிச் சோலையில் இருந்தோம் அப்போது, ஒருவன் எம்மிடம் நெருங்கி வந்தான்் “நீண்ட மென்மையான தோளை யுடைய மடப்பம் வாய்ந்த மெல்லியரே, பகற் போதும் ஒளி குன்றியது நானும் மிகவும் இளைப்புடையவனாய் உள்ளேன் ஆதலால் இந்த மெல்லிய இலைப் பரப்பிலே நீங்கள் சமைத்த இந்தச் சோற்றை விருந்தினனாய் இருந்து உண்டு, 'கல் என்ற ஆரவாரம் உடைய இச் சிறு குடிலில் தங்கினால் உங்களுக்கு ஏதேனும் இடையூறு உண்டோ?” என்று வின வினான். யாங்கள் அந்தப் புதியவனைக் கண்டமையால் குனிந்த முகத்துடன், ஒருவன் பின் ஒருவர் மறைவான இடத்தைச் சேர்ந்திருந்து இழும் என்னும் மென்மையான சொல்லால் அவன் வினவியதற்கு விடையாய் இந்த உணவு உமக்கு ஏற்றது அன்று இழிந்த கொழுமீனால் ஆன உணவு!’ எனச் சொன்னோம் பின்பு - தோழியரே, கொடிகள் அசையும் நாவாய்கள் தோன்றுகின்றன. அவற்றைச் சென்று காண் போம் எனச் சொல்லிக் கொண்டு நாங்கள் கட்டிய சிற்றில், சிற்றுணவு முதலியவற்றைக் காலால் அழித்துவிட்டு அங்கு நில்லாமல் சென்றனர் ஆயத்தார். அப் பலருள்ளும், அவன் என்னை நோக்கிய பார்வையுடனே நல்ல நெற்றியை உடைய வளே, நான் போகவோ?’ என்று தன் நெஞ்சம் அழியுமாறு கூறினான்

அதைக் கேட்ட நான் நீவிர் செல்லுக!' என்று சொன். னேன் அவன் அவ் இடத்தினின்றும் அகலவில்லை அவன் தன் தேரின் கொடிஞ்சியைப் பற்றிக் கொண்டு தலைவியை நோக்கியபடியே நின்றனன் இன்றும் என் கண்முன் நிற்பது அதுவே போலும்! இந்த நிகழ்ச்சியை நற்றாய் அறியினும் அறிக அலர் கூறும் வாயையுடைய இச் சேரியில் வாழ்பவர் களான மகளிர் அலர் தூற்றினும் தூற்றுக அன்னையே,