பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


செங்கதிரின் வெப்பத்தால் உண்டான பிளப்புகளை உடைய குன்றுகளைக் கடந்து போகும் கடாவை விரைவாகத் துண்டும் கோலையுடைய உப்பு வாணிகளின் காதலைக் கொண்டவள் இளைய மகள். அவள் சில திரண்ட வளை யல்கள் ஒலிக்குமாறு வீசி 'நெல்லுக்கு ஒத்த அளவினதே வெண்மையான உப்பு’ என்று சேரியில் பண்டமாற்றான விலை கூறினாள். அவ்வாறு கூறலால், ஒலி வேற்றுமை அறியும் மலையில் உள்ள நாய் அவள் குரலை வேற்றுக் குரல் என்று குரைத்து வந்தது. அதற்கு அஞ்சிய மதர்த்த கயல் மீன்கள் இரண்டு பொருவது போன்ற அவள் கண் களால் எனக்கு இந் நோய் உண்டாகியது புதிய தினைக் கொல்லையை ஆக்க முயலும் குறவன் மரங்களை வெட்டிச் சுட்டெரிக்கும் தீப்புகை நிழலைப் போன்ற கரிய பழஞ் சேறு; அச் சேற்றில் அழுந்திய வண்டியின் இடையூறு நீங்க, வருத்தப் பட்டு இழுக்கும் அவளுடைய தந்தை கையில் பற்றி எருது போல் யான் வருந்தி வெப்பமான பெருமூச்சு விடச் செய்தது இந் நோய் என்று தன் நண்பனிடம் தலைவன் கூறினான்.

284. தலைவிக்குத் தாயின் அரிய காவல்

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; 'எல்லினை பெரிது'எனப்பல் மாண் கூறி, பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, அருங் கடிப்படுத்தனள் யாயே, கடுஞ்செலல் வாட்சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறைக், கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, மாலை மணி இதழ் கூம்பக், காலைக் கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து, 'வாரார்கொல்?’ எனப் பருவரும் - தார்.ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!

- குறுவழுதியார் அக 150