பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

185


மாலை சூடிய மார்பை உடையவனே, நீ பிரிந்து சென்ற போது, விரைவான செலவையும் வாள் போன்ற கொம்பை யும் உடைய சுறாமீன் திரிகின்ற சங்குகள் மேய்கின்ற பெரிய துறைகளைக் கொண்ட நெய்தல் மலர்கள் மாலை நேரத்தில் இதழ்கள் குவியக், காலையில் தேன் மணம் கமழும் குவளை கண் விழிக்கின்ற கழியையும், செருந்தி மலர் மலர்கின்ற கடற்கரைச் சோலையையும் பார்க்கும் போதெல்லாம், தலைவி பலவற்றையும் வெறுத்து இனி நம் தலைவர் வர மாட்டாரோ என்று எண்ணித் துன்புற்றாள் அதன் மேலும் - தாய் பின்னும் படி வளர்ந்த ஐம்பால் கூந்தலையும், பொன் போல் மார்பில் தோன்றிய தேமலையும், கட்டிய கச்சானது அற்று வீழும்படி விளங்கும் முலையையும் பார்த்துப், 'பெரிதும் அழகுடையாய்!” என்று பல முறையும் கூறிப், பெரிய தோளைப் பெரிதும் தழுவி, 'இவளது அழகுக்குக் காரணம் இவளுக்கு ஒருதலைவனுடன் கூட்டமுண்டு என்று நினைந்து பார்த்துத் தலைவியை அரிய காவலில் வைத்து விட்டாள். என்று தோழி தலைவனிடம் கூறி திருமணம் முடிக்க வேண்டினான்

285. தலைவர் மணம் பேச வந்தார்

ஒடுங்கு ஈர் ஒதி நினக்கும் அற்றோ? நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம், # அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி, நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த கோட்டுவட்டு உருவின் புலவு நாறு முட்டை பார்ப்பு இடன்ஆகும் அளவை, பகுவாய்க் கணவன் ஒம்பும் கானல்அம் சேர்ப்பன்; முள்உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல வாவு உடைமையின் வள்பின் காட்டி, ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி நூதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,