பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

17


22. அவளை நன்கு அறிவோம்! கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே? ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென, வெள்ளாங்குருகை வினவுவோளே! - ஐங் 122 தலைவ! நின் நட்பாயினளை யாம் தெளியக் கண்டுள் ளோம். அவள் மிக்க மணல் பரப்பில் விளையாடினாள். அக் காலை தன் ஒளியுடைய அணி அம் மணலுக்குள் வீழ்ந்தது. அதனால் அவள் தேடிக் கொள்ளும் பொருட்டு, பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாங்குருகினை நோக்கி, நீ என் அணியைப் பார்த்தாயோ!' என்று வினவியபடி நின்றாள். ஆதலால் அவளை நாங்கள் நன்கு அறிவோம்” என்று பரத்தை தலைவனுக்குக் கூறினாள்.

23. கடலில் பாய்ந்தாடுவாள்! கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே? ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெருங் கடல் திரை பாய்வோளே! - ஐங் 123 “நெய்தல் நிலத்தலைவனே, நினக்கு உறவானவளை யாம் கண்டிருக்கின்றோம். அவள் ஒளி பொருந்திய நெற்றியை யுடைய தோழியர் கூட்டம் ஆரவாரிப்பக் குளிர்ந்த பெரிய கடலில் ப்ரியிந்தாடுவாள். ஆதலால் அவளை நன்கு அறி வோம்" என்று பரத்தை தலைவனைப் பார்த்துச் சொன்னாள்.

24. கடலில் மண்ணை வீசினாள்

கண்டிகும் அல்லமோ, கொண்க: நின் கேளே? வண்டல் பாவை வெளவலின் நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! - ஐங் 124 "தலைவ, கடலின் நீர் விக்கு வந்து, தான்் செய்து வண்டலகத்தில் வைத்து ஆடிய பாவையைக் கவர்ந்து சென்றால் சினந்து நுண்ணிய மணற்பொடியை அள்ளி யெடுத்துக் கடலில் வீசி அதைத் துர்த்து நின்றவள் ஆதலால் நின் கேள் ஆயினவளை யாங்கள் நன்றாக அறிவோம்” என்று பரத்தை உரைத்தாள்.