பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


287. நகைப்புக்கு இடமாகின்றது

நகை நனி உடைத்தால் - தோழி - தகை மிகு கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி வீ ததை கானல் வண்டல் அயர, கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே புலவு நாறு இருங்கழி துழைஇ, பல உடன் புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் தாழை மணந்து ஞாழலொடு கெழிஇ, படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் பொன்நேர் நுண்தாது நோக்கி, என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே.

- கருவூர்க் கண்ணம்பாளனார் அக 180 "தோழியே, நான் கூறுவதைக் கேட்பாயாக நான் அழகுடைய மாலை சூடிய ஆயத்தாருடன் கூடி மணல் மேட்டில் ஏறி மலர் நெருங்கிய சோலையில் விளையாடி னேன் அவ் அமயத்தே ஒரு தலைவன் விரைந்த தேரைச் செலுத்தியபடி வந்தான்் அவன் குளிர்ந்த குளத்தே நிறைந்த ஒளியுற்ற பூக்களையுடைய குவளைக் கொடியின் அரும்பை விரித்துக் கட்டிய வண்டுகள் மொய்க்கும் மாலையை, என் பின்னல் முதுகில் தாழ்ந்திட, நான் வேண்டாத போதே சூட்டினான் நல்ல வளர்ச்சியைப் பெற்ற என் கொங்கையைப் பார்த்தான்் பின் ஏதோ நினைந்து காலம் தாழ்க்காமல் போய்விட்டான் அதற்கே, இந்த ஆரவாரத்தையுடைய ஊர் புலால் நாற்றம் வீசும் பெரிய கழியைத் துழாவிப் பலவகைப் பறவைகளும் ஒன்றாய்த் தங்கியிருக்கும் இயல்புடைய, முள்ளுட்ைய நீண்ட தாழையைச் சார்ந்து புலிநகக் கொன்றை யுடன் பொருந்தித் தோட்டத்தில் உள்ள புன்னையின் பொன் போன்ற தாதினைப் பார்த்து என்னையும நோக்குகின்றனர்