பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

189


இதற்குக் காரணம் யாதோ? இது மிகவும் நகைப்பிற்கு இடமாய் உள்ளது!” என்று தலைவன் ஒருபக்க இருப்பத் தலைவி தோழிக்குக் கூறினாள்

288. பழி கூறுகின்றது இவ்வூர் திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு உப்பின் குப்பை ஏறி, எல் பட $ வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; அலையல் - வாழி! வேண்டு, அன்னை உயர்சிமைப் பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த வம்ப நாரை இரிய, ஒரு நாள், பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும், உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை இருங்கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில நிரைமணிப் புரவி விரைநடை தவிர, இழுமென் கானல் விழுமணல் அசைஇ, ஆய்ந்த பரியன் வந்து இவண் மான்ற மாலைச் சேர்ந்தன்றோ, இலனே!

- உலோச்சனார் அக 190 தாயே! வாழ்க நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக: உயர்ந்த உச்சியை உடைய சோலை அதில் புன்னை மரத்தின் கிளையில் இருந்த புதிய நாரை நீங்கிய, முன்னம் ஒருநாள் மிக்கு வரும் வாடைக் காற்றால் அலைகளைக் கரையில் மோதவும் ஒரு தலைவன் கடலோரத்தில் தேரில் வரலானான் அதன் மேலும் பெருங்கழியை யுடைய துறைமுகத்தில் வலிய சுறாமீன் தன் உடம்பில் பொருந்தத் தாக்கி எறிந்தது. அதனால் தேர்ப் பாகன் தேரை நிறுத்தினான் அதனால் எழுச்சியும் பயனும் குன்றியனவும் பூட்டு அழிந்த செய்கையை உடையனவுமான மணிமாலை பூண்ட குதிரைகள் தமக்கு இயல்பான நடையை ஒழிந்தன. இவ்வாறு மெலிந்த அக்