பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வில்லைப் போல் தாவிச் சென்று தன் புண்ணினின்று ஒழுகிய குருதியால் புலால் நாற்றம் வாய்ந்த, கடல் நீரின் நிறம் மாறுபட அலை நெருங்கிய கடல் பரப்பைக் கலக்கி வலிமை குன்றி, வரிசைப் படவுள்ள படகின் பக்கத்தில் வந்து சேரும் இத்தகைய துறையை யுடையவன் நம் தலைவன் அவன், நள்ளிரவில் நம் மூங்கிலை ஒத்த தோளை நினைத்து இங்கு வந்தபோது நம்மூர்ச் சோலையை யுடைய பெரிய துறையின் அழகைப் பாராட்டி இடையறாது புகழ்ந்தான்் அத்தகைய வன் இப்போதோ தன் மென்மையுடைய மார்பில் யாம் கண் உறங்குவதைப் போக்கித் தாழையின் தாழ்ந்த கிளையினால் தன் தேர் தடைப்படுதலால் செல்வது அரிது என்று கூறுவன் என்பதை நாம் பலமுறை கேட்டோம் என்று ஒருபக்கம் மறைந்துள்ள தலைவன் கேட்கத் தலை விக்குக் கூறுவது போல் கூறினான்

291. தோள் அழகுகெடாதிருக்க வழி சொல்

ஊரும் சேரியும் உடன்இயைந்து அலர் எழ, தேரொடு மறுகியும், பணிமொழி பயிற்றியும், கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், கடாஅ யானைக் குழுஉச் சமம் ததைய, மன் மருங்க அறுத்த மழு வாள் நெடியோன் முன் முயன்று அரிதினின் முடித்த வேள்விக், கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், அருங் கடி நெடுந்துண் போல, யாவரும் காணலாகா மாண் எழில் ஆகம் உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே நெடும்புற நிலையினை, வருந்தினைஆயின் முழங்கு கடல் ஒதம் காலைக் கொட்கும், பழம் பல் நெல்லின் ஊனுர் ஆங்கண், நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை முடங்குபுற இறவோடு இன மீன் செறிக்கும் நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து