உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


முலையையுடைய மார்பில் இனிய துயிலை விரும்பினாய் என்றால், அங்ங்னம் அவளைக் கூடிச் செல்வதற்கு வண்டுகள் மொய்க்கும் மலர்ந்த பூக்களையுடைய செருந்தி மரம் உள்ள வெண்மையான மணல் பரந்த மூலையில் புன்னை மரங்களை யுடைய குளிர்ந்த சோலைக்குப் பகற்பொழுதில் வருவாயாக, என்று இரவுக்குறி வந்த தலைவனிடம் தோழி கூறினாள்

294. யாது இதற்குக் காரணம்? எவன் கொல்? வாழி, தோழி - மயங்குபிசிர் மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை வண்டு இமிர் இணர நுண் தாது வளிப்ப, மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வரக், கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக், கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, தாரன், கண்ணியன், சேர வந்து ஒருவன், வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி வெவ் வாய்ப்பெண்டிர் கவ்வையின் கலங்கி, இறைவனை நெகிழ்ந்த நம்மொடு துறையும் துஞ்சாது, கங்குலானே! செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் அக 250 “என் தோழியே, வாழ்க நெருங்கிய துளிகள் மிகுந்த அலைகளால் வருந்திய அசையும் நிலையுடைய புன்னை மரத்தின் வண்டுகள் ஒலிக்கும் மலர்க் கொத்துகளின் பூந்து கள் உதிர்ந்து அழகு செய்யும் மணம் கமழும் மெத்தென்ற மணல் மேடு அதில் ஆயத்தாருடன் கலந்து விளையாடி னோம் அப்போது தாரையும் மாலையையும் அணிந்த ஒரு தலைவன் மொட்டையுடைய பெரிய தேரினை ஏவலரோடு விலக்கித் தொலைவிலே நிறுத்தி விட்டு, நெருங்கி வந்தான்் யாம் செய்த மணல் வீட்டினைப் பாராட்டிய சொல்லை உடையவனாய் நம்மிடமிருந்து பதில் ஏதோன்றையும் எதிர் பார்த்துப் பெறாதவனாய் வாளா மீண்டு சென்றான்