பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

197


அது முதற்கொண்டு அரிய நினைவால் ஆன துன்பத் தால், நம் பெருந்தோள் மெலிய, அழகிய வலையை உடைய பரதவரின் கடற்கரையில் உள்ள சிற்றுாரில் வாழும் கொடிய வாயைப் பெற்ற மகளிர் தூற்றும் பழிச் சொல்லாலே உள்ளம் கலங்க, முன் கையில் வளை நெகிழப் பெற்றது இத் தன்மை கொண்ட நம்முடன் இரவுப் பொழுதில் கடல் துறையும் உறங்கவில்லை! இதற்குக் காரணம் யாதோ?’ என்று தலைவன் கேட்கத் தோழி வினவினாள்

295. இரவு வரின் என்ன ஆவாளோ?

மண்டிலம் மழுக, மலைநிறம் கிளர, வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக் கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக், . கரை ஆடு அலவன், அளைவயின் செறிய, திரை பாடு அவியத் திமில் தொழில் மறப்பச் செக்கர் தோன்றத் துண்ைபுணர் அன்றில் எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக், கழி மலர் கமழ் முகம் கரப்பப் பொழில் மனைப் புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள் நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அன்பிலாளன் அறிவு நயந்தேனே.

4 - மோசிக் கரையனார் அக 260 மலைகள் நிறம் விளங்கித் தோன்றவும், வண்டுக் கூட்டம் மலர்களில் பாய்ந்து ஒலிக்கவும், தாழைச் சோலையில் மேலே இருந்தபடி நாரைகள் ஒலிக்கவும், கடற்கரையில் விளையாடி நண்டு வளையில் புகவும், அலைகள் இல்லை யாகவும், மீன்பிடி படகுகள் வேட்டையாடலை நீங்கவும், செவ்வானம் தோன்றத் தன் துணையைப் பிரியாமல் கூடியிருக்கும் அன்றிற் பறவை மணல் மேட்டில் உள்ள பனை மரத்தின் உள் மடலில் தங்கவும், உப்பங் கழியிடத்தில் மலர்கள் நறுமணம் கமழும்