பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


25. சிற்றிலைக் கடல் அலைத்தது கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே! - தெண் திரை பாவை வெளவ, உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! - ஜங் 125 “நெய்தல் தலைவனே! நினக்கு நட்பானவளை யாங்கள் கண்டோம். தான்் செய்த வண்டற் பாவையைக் கடல் அலை கள் அழிக்கவே அவை அதைக் கவர்ந்து கொண்டன என்று மயங்கிக் கண்மை பூசப் பெற்ற விழிகள் சிவக்குமாறு அழுது நின்றாளாதலால்!” எனப் பரத்தை தலைவனை நோக்கி யுரைத்தாள்.

26. நீராடுவாள் நின் உறவினள்! கண்டிகும் அல்லமோ, கொண்க: நின் கேளே? உண் கண் வன்டினம் மொய்ப்பத், தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! - ஐங் 126 “தலைவா! நின் உறவாயினவளை நாம் கண்டோம். அவள் மை பூசப்பெற்ற கண்களை மலர் என எண்ணி வண்டு கள் மொய்த்து ஆரவாரம் செய்ய, தெளிந்த கடலில் பெரிய அலைகளின் நடுவே மூழ்கி ஆடினாளாதலால்!” எனப் பரத்தை தலைவனை நோக்கியுரைத்தாள்.

27. மாலை அணிந்த இளமுலையாள் கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? தும்பை மாலை இள முலை நுண் பூண் ஆகம் விலங்குவோளே! - ஜங் 127 “நெய்தல் நிலத் தலைவனே, நின் உறவானவளை யாம் கண்டோம். அவள் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்த தன் இளமுலைகள் பொருந்திய நுண்ணிய பூண் அணிந்த மார்பு தழுவுவதற்கண் பொருந்தா வகையில் விலங்கி நீங்குகின்றாளாகலின்'

28. மரப்பாவைக்குத் பாலை ஊட்டுபவள்! கண்டிகும் அல்லமோ, கொண்க: நின் கேளே?

உறாஅ வறுமுலை மடாஅ, உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! - ஐங் 128