பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

199


இவள் தோள்கள் மெலிந்தன சிவந்த இறால் மீன் கலங்கிய நுரையுடன் கூடிய திவலை பொருந்திய அலைகள் பெரிய அடியை யுடைய புன்னை மரத்தின் கிளைகளில் பொருந்தும் சோலை. அச் சோலையை அடுத்த பெரிய துறையை நோக்கிக் கொய்யப் பெற்ற பிடரி மயிரையுடைய குதிரைகளைக் கொண்ட வள்ளன்மையுடைய தலைவனான குட்டுவனின் 'கழுமலம்' என்ற ஊரைப் போன்ற அழகிய மாமை நிறமுடைய மேனி அழகு கெடக் கண் உறங்காமல் இவள் உள்ளம் கலங்குவாள்.

நீ தான்் தெய்வத்தை யுடைய மரத்தில் உள்ள முள்ளால் ஆன கூட்டில், தன் சேவலுடன் புணராத கரிய அன்றிற் பேடை துன்பம் அடைந்து வருந்தும் இரவிலும் உம் ஊர்க்குச் செல்ல நினைக்கின்றீர் யான் வருந்துகின்றேன், என்று பகலில் வந்து செல்லும் தலைவனை விரைந்து மணம் கொள்ளக் கூறினாள் தோழி.

297. பெறுதற்கரியவள் பொன்அடர்ந் தன்ன ஒள் இணர்ச் செருந்திப் பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள், திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி, அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள், நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து, நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழந்தும், பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும், படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், தருகுவன்கொல்லோ தான்ே - விரிதிரைக் கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த் தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

- அம்மூவனார் அக 280 நெஞ்சமே! பொன்மலர்கள் நெருங்கி இருந்ததைப் போன்ற ஒளியுடைய பூங்கொத்துகள் கொண்ட செருந்தியின்