பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பல மலர்களைச் சூடிய அழகு பொருந்திய கூந்தலைக் கொண்டவளாய், மணல் பொருந்திய கடற்கரையில், நண்டை ஒட்டி விளையாடி இளைப்பாறியிருந்த தலைவி, நன்மை மிக்க சிறந்த பொருளும் அணிகலனும் தந்தாலும் பெறுவ தற்கு அரியவள்; அப்படியானால் நாம் என்ன செய்வோம்?

பரந்த கடலில் திரண்ட வடிவுடைய முத்துகளை வாரிக் கொண்டு வந்து வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கரையில் அவற்றைப் பகுத்துக் கொள்ளும் சோலை பொருந்திய பெரிய துறையையுற்ற நெய்தல் தலைவன் அவளுடைய தந்தை

நாம் தங்கும் இந்த நாட்டில் இருப்பதைக் கைவிட்டுப் போய், அவனுடன் கூடிப் பெரிய கடற்கரையை அடுத்த உப்பு வயலில் உப்புப் பொதியுடன், திரிந்து வருந்தியும், பெரிய கடலின் ஆழத்தில் புணையில் சென்றும், அவனுடைய வய மாகிப் பணிந்தும் சார்ந்தும் இருப்பின் அறத்தை எண்ணிப் பார்த்து அவளை நமக்குத் தருவாளோ? என்று தலைவியைக் கண்டு திரும்பிய தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னான்

298. பசந்தன விழி குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, . இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய

கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், நுண் ஞான் அவ் வலைச் சேவல் பட்டென, அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, பைதல் பிள்ளை தழிஇ, ஒய்யென, அம் கண் பெண்ணை அன்புற நரலும் சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேப்பன், கழி சேர் புன்னை அழி பூங் கானல், தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் மணவா முன்னும், எவனோ - தோழி!வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, கரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் மணி ஏர் மாண் நலம் ஒரீஇப், பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்னே?

- நக்கீரர் அக 290