தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
203
நீயும் இன்பம் அடைய எம் வீட்டில் நல்ல விருந்தாய் ஏற்றுப் பேணுதலைப் பொருந்துவோம், என்று பகலில் வந்து நீங்கும் தலைவனுக்குத் தோழி சொன்னாள்.
300. ஊர்க்கு வருக! கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், தொழுதகு மெய்மை, அழிவு முத்துறுத்து, பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு இவளும் பெரும் பேதுற்றனள், ஒரும் தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, காதலின் வளர்ந்த மாதர் ஆகலின், பெரு மடம் உடையரோ, சிறிதே அதனால், குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்பl இன்று இவண் விரும்பாதீமோ சென்று, அப் பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் கூஉம் கண்ணஃதே தெய்ய - ஆங்க உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து உரும் இசைப் புணரி உடைதரும் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே. - நக்கீரனார் அக 310 குன்றைப் போன்று விளங்கும் குவிந்த மணலையுடைய கடற்கரைத் தலைவனே! விரைவாகச் செல்லும் தேரை ஏவலாளருடன் தொலைவில் நிறுத்தி இங்கு வந்து நிற்கும் பெருந்தன்மைக் குணத்தை உடையவனாக விளங்குகின்றாய் அதுவே அன்றி மற்றவர் வணங்கத் தக்க தோற்றம் உடைய வனாகவும் உள்ளாய் இத்தகைய நீயும் பல நாள்களும் வந்து பணிவான சொற்களைப் பலவாறாகக் கூறுகின்றாய்
ஆதலால், இவளும் கருங்குவளைப் பூப் போன்ற மை தீட்டப்பட்ட கண் கலங்க உன்னிடம் பெரிய மயக்கம் கொண்டுள்ளாள்
தாய்மார் உள்ள பெரிய இல்லத்தில் உறவினர் பாராட்டக் காதலுடன் வளர்ந்த பெண்டிர் ஆதலால் இவளைப் போன் றோர் சில காலத்துக்கு நாணத்தை உடையவர் ஆவர்