பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

207


நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் சேப்பின் எவனோ - பூக் கேழ் புலம்பபசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் - திண் திமில் எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், கோட் கறாக் கிழித்த கொடு முடி, நெடு வலை தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, முன்றில் தாழைத் தூங்கும் தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?

- நக்கீரர் அக 340

மலர்கள் பொருந்திய கடற்கரையை உடைய தலைவ! கெடாத நல்ல புகழையுடைய பொன்னால் ஆன அணிகலன் அணிந்தவன் திரையன். அவனது பல பூஞ் சோலைகளை யுடைய 'பவத்திரி’ என்னும் ஊர் போன்றவள் இவள். இவளது அழகிய இளமைச் செவ்வி தொலையும்படி, வழி யானது 'ஒல் என்ற ஒசையுடன் நீர் பெருகப் பெற்றுள்ளது மேலும் கூர்மையான பற்களையுடைய பாம்புடனே சுறா மீனும் திரியும் பொழுதும் பெரிதும் இருண்டுவிட்டது. இத் தகைய நிலையிலும் தலைவர் சென்று விட்டாரே என்று நாங்கள் உன்னைப் பற்றி அடையும் துன்பம் நீங்கும்படி -

திண்ணிய படகுகளில் போய்த் தம் பகற் பொழுதிற் குரிய தொழிலை மேற்கொண்ட கொடுந் தொழிலையுடைய நெய்தல் நில மக்கள், கடிய காற்றின் மிக்க விசையுடன் செல்லுதலால், கொலைத் தொழிலையுடைய சுறா மீன்கள் ஒன்றாய்க் கூடிக் கிழித்தலால் கிழிபட்ட வளைந்த முடி களையுடைய வலைகள் தொழில் ஒழிந்து கடலினின்று குளிர்ந்த காற்று வீசுந்தோறும் வீட்டின் முற்றங்களில் வளர்ந்துள்ள தாழை மரத்தின் மீது அசையும் இத் தன்மை கொண்ட தெளிந்த கடற்பரப்பையுடைய எம் வாழ்தற்கு