பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வந்த மாலை பெயரின், மற்று இவள் பெரும் புலம்பினளே தெய்ய; அதனால் பாணி பிழையா மாண் வினைக் கலிமா துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஒம்பி, நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, இரவின் வம்மோ - உரவு நீர்ச் சேர்ப்பlஇன மீன் அருந்து நாரையோடு பனைமிசை அன்றில் சேக்கும் முன்றில், பொன் என நன் மலர் நறு வீ தாஅம் புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.

v - - மதுரைக் கண்ணத்தனார் அக 360 பல பூக்களையுடைய குளிர்ந்த சோலையில் பகல் முழு வதும் கழித்து, ஒற்றைச் சகடத்தை யுடைய கதிரவன் மேற் கில் உள்ள மலையில் மறைய, வளைந்த குழியில் உள்ள சேற்றில் பொருந்திய திரண்ட காலையுற்ற, நெய்தல் மலரின் நுட்பமான தாதினை உண்டு வண்டின் கூட்டம் அம் மலரை விட்டுப் போகும் அஞ்சத்தக்க மிக்க வன்மையுடைய இரண்டு பெருந் தெய்வங்களான மாயோனும் சேயோனும் ஆகிய வரின் செந்நிறமும் கரிய நிறமும் பொருந்திய தோற்றம் போல அந்தி வானத்தின் அழகுடன் கடலின் அழகையும் கொண்டு வந்த இம் மாலைக் காலத்தில் நீ நீங்கின் இவள் மிக்க தனிமை அடைந்து வருந்துவாள்

அதனால், தாளத்துக்கு ஏற்ப அடியிட்டுச் செல்லும் மாட்சிமையுடைய தொழில் அமைந்த செருக்கு உடைய குதிரை, ஊர் உறங்கும் இரவில் ஒலித்தலைக் காத்து, உன் நீண்ட தேரைத் தொலைவில் நிறுத்தி, மெல்லெனக் குன்றி னின்று இழிந்து செல்லும் ஆண் யானையைப் போல் திரண்ட மணல் மேட்டைக் கடந்து மீன் இனத்தை உண்னும் நாரைகளுடன் பனை மரத்தின் மீது அன்றில் பறவை தங்கி யிருக்கும் நம் முற்றத்தின் அருகில் உள்ள பொன் போன்ற நறுமண மலர்கள் உதிர்ந்து பரவும் புன்னை மரங்கள் உள்ள சோலையில் செய்த நம் குறியிடத்துக்கு இரவிலே வருவா யாக, என்று தோழி தலைவனிடம் இரஞ்சினாள்