பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

211


306. எழுந்தால் எழட்டும் அலர் 'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், பகலே எம்மொடு ஆடி, இரவே, காயல் வேய்ந்த தேயா நல் இல் நோயொடு வைகுதிஆயின், நுந்தை அருங் கடிப் படுவலும் என்றி; மற்று, நீ செல்லல் என்றலும் ஆற்றாய்; செலினே, வாழலென் என்றி, ஆயின்; ஞாழல் வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் தண் அரும் பைந்தார் துயல்வர, அந்தி கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, நீயே கானல் ஒழிய, யானே வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, ஆடு மகள் போலப் பெயர்தல் ஆற்றேன்தெய்ய, அலர்க, இவ் ஊரே!

- அம்மூவனார் அக 370 வளைவான மாலையை உடைய இளைய மகளிர் வண்டல் விளையாட்டை விளையாடி மீண்டு செல்வர். பகலும் ஒளி குறைந்தது. பகற்பொழுதில் அகன்ற இலைகளை யுடைய புன்னை மரத்தின் புள்ளியில்லா நிழலில் எங்களுடன் விளை யாடி, இரவுப்பொழுதில், காய்ந்த புல்லால் வேயப்பெற்ற வளம் குன்றாத நம் இல்லத்தில் வருத்தத்துடன் பொருந்தி யிருப்பாயாயின் உன் தந்தையின் அரிய காவலிற்படுவேன் என்று கூறுகின்றாய்.

அங்ங்னமின்றி நீ இல்லத்துக்குச் செல்லுக என்று நான் கூறுவதையும் பொறுத்துக் கொள்ளாது, சென்றால் உயிர் வாழமாட்டேன் என்கின்றாய். அப்படியாயின், புலிநகக் கொன்றையின் வண்டு மொய்க்க மலர்ந்த மலர் மாலையுடன் நெய்தலின் குளிர்ந்த அரிய பசிய பூமாலை அசைய, அந்திக் காலத்துக் கடல் தெய்வம் கரையில் நின்றதைப் போன்று, நீ இந்தக் கடற்கரைச் சோலையில் தனித்து நிற்க, வெறி