பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யாட்டம் மேவிய மகள் போல் பொலிவுடைய என் அழ கினைத் துறந்து அவள் பின்பு வ்றிதே மீள்வது போல் நீங்க இயலாதவள் ஆனேன். இவ் ஊரானது அலர் சொன்னாலும் சொல்லுக என்று தோழி தலைவிக்குக் கூறுவதுபோல தலைவன் கேட்பக் கூறினாள் .

307. ஏற்க வேண்டும் தலைவனை

தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'தும் ஊர் யாது?’ என்ன, நனி நனி ஒதுங்கி, முன் நாள் போகிய துறைவன், நெருநை, அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக்கொண்டு, தன், தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடுஉம் அலவற் காட்டி, நற்பாற்று இது என நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே, உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; நாம் எதிர் கொள்ளாம்.ஆயின், தான்் அது துணிகுவள் போலாம்; நாணு மிக உடையன் வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?அம்ம, தோழி-கூறுமதி நீயே.

- மதுரை மருதனின் நாகனார் அக 380 தோழி! நான் கூறுவதைக் கேட்பாயாக, தலைவன் தனியாய் வந்தான்்; 'உம் ஊர் யாது?’ என வினவினான் வினவிக் குறுகக் குறுக நடந்து முன்னாளில் சென்றான் தலைவன்

நேற்று, அகன்ற இலையையுடைய நாவல் மரம், நீர் உண்ணும் துறையில் இட்ட பழத்தை அதன் அழகு அழிய இழுத்துக்கொண்டு போய்த் தாழையின் வேர்ப் பாகத்தில் வளையில் உள்ள தன் அன்பு பொருந்திய பெண் நண்டுக்குத் தரும் ஒர் ஆண் நண்டைக் காட்டி, இது நல்ல தன்மை யுடையது எனச் சொல்லி நீளச் சிந்தித்த மனத்துடன் மீண்டு போனான்

இன்றும், உதோ பார், அவனது தேர் தோன்றுகின்றது. நாம் அவனை எதிர்கொண்டு ஏற்காமையால், மிக்க நாணம்