பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

213


உடையவன், ஆதலால் அவன் அதை மெய் என்றே எண்ணு வான் போலும் நான் வெண்மையான மணற்கரையில் மறைந்து கொள்வேனோ? உன் கருத்தை நீ கூறுக, என்று பின்னின்ற தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவனுக்குக் குறை நயப்பக் கூறினாள்

308. வலியிழந்துவிட்டது என் மனம் உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி, அதர் படு பூழிய சேண் புலம் படரும் ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக் கண நிரை வாழ்க்கைதான்் நன்றுகொல்லோ? வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி, “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்! கொள்ளிரோ” எனச் சேரிதொறும் நுவலும் அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என சிறிய விலங்கினமாக, பெரிய தன் அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி, 'யாரோ, எம் விலங்கியீஇர்?' என மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற சில் நிரை வால் வளைப் பொலிந்த பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!

- அம்மூவனார் அக 390 பாங்கனே, களர் நிலத்தில் விளைந்த உப்பினது விலையைச் சொல்லி வழிகளில் உள்ள புழுதியைப் பெற்ற தொலைவில் செல்லும் செறிந்த கோல்களையுடையவராய்ச் செல்லும் உப்பு வாணிகர் போவதான் நீண்ட வழியில் அக் கூட்டத்துடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை சிறந்தது போலும்! வளைந்து சுருண்ட கூந்தலின் முடி முழுவதும் அலையக் கொண்டு மென்மையான அகன்ற அல்குல் அழகுபெற அணிந்த பல தளிர்களுடன் கூடிய தழையாடை அசையு 'மிடத்து அசைந்து நடந்து, 'ஊராரே! நெல்லும் உப்பும்