பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

215


விளையா இளங்கள் நாற, பலவுடன் பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் புதுவது ஆகின்று அம்ம - பழ விறல் பாடு எழுந்து இரங்கு முந்நீர், நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!

- உலோச்சனார் அக 400 தோழி, தன் இல்லத்தைக் கடந்து தங்கினும் அலரா கும் என்று சொல்லப்படும் நம் தலைவனுடன் விரும்பிச் சோலையில் போய்த் தங்கிய நம் களவொழுக்கம் நீங்குமாறு முன் பிறப்பில் பல நன்மைகளும் செய்து பொருந்திய நல் வினையாம்

குதிரை நூல் கூறும் இலக்கணம் கொண்ட பிறப்பை யும் நீலமணியான நெற்றிச் சுட்டியையும், சொரசொரப்பு உண்டாக அடர்ந்து கொய்யப் பெற்ற மயிர் பொருந்திய பிடரையும், நெய் வார்த்து மிதித்து இயற்றிய உணவை வெறுத்த கொழுவிய சோற்றை உண்ணுகின்ற வரிசையாய்ப் பொருந்திச் செல்லும் செலவையும், தினையின் கதிர் நீண்டு வளைந்தாற் போன்ற வளைந்த தலையையும் உடையன நான்கு குதிரைகள். அவை தாங்கும் நுகத்தினைப் பொருத்திப் பருத்த கழுத்தில் நெடுக அணிந்த பல வடங்களையும் ஒலிக்குமாறு பூட்டி அறிவுடைய பாகன் செலுத்துவதால் தாழ்ந்த துறையில் நீர் பாய்ந்தது போன்ற தாவிச்செல்லும் குதிரை பூட்டிய திண்ணிய தேரின் அம்பு பாய்ந்தது போன்ற வலிய காலின் செலவு பாலைக் கண்டாற் போன்ற காற்றால் திரட்டப்பட்ட வெண்மையான மணலில் வாய்க்கால் போல் சுவடு உண்டாகச் செல்ல, அங்குக் குழம்பாகிய சேற்றின் பரப்பைக் கொண்ட இருண்ட நீரையுடைய குறுகிய வழியைக் கடந்து கடற் கரையையுடைய நம் தலைவன் வந்த அந் நாள் -

மலர்கள் நிறைந்த கரிய உப்பங்கழியில் இலைகளுடன் அசையும் ஆழமான நீர் பொருந்திய நெய்தல் நிலத்தில் முதிராத இளையகள் நாறும்புடி மலர்ந்த மலர்களை மற்றப் பூக்கள் பலவற்றுடன் சூடிக் கொண்டு வருதலைப் பார்த்து, பழைய பெருமை கொண்ட ஆரவாரம் மிக்கு முழங்கும்